’கனி கண்மணி கண்ணுறங்கு பொன்மணி’: தமிழில் தாலாட்டு பாடிய பாலிவுட் நடிகை!

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கய் ஹெர்ஸ்பர்க் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர்.

By: July 18, 2020, 12:07:18 PM

பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தவர் நடிகை கல்கி கோச்சலின். அவரது பெற்றோர் பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர்கள். ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார் கல்கி. தனக்கு தமிழ் நன்றாக தெரிந்திருந்தும், வாய்ப்புகள் வரவில்லை எனக் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, நேர்க்கொண்ட பார்வை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சென்னையில் நாளுக்கு நாள் உயரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை!

 

View this post on Instagram

 

Adapted from the original to accommodate my lack of musical experience????, but this Tamil lullaby is a great one to get her in sleep mode????

A post shared by Kalki (@kalkikanmani) on

பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யாப்பை கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் கல்கி. பின்னர் 2015-ல் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.  இதைத் தொடர்ந்து இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கய் ஹெர்ஸ்பர்க் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். இதையடுத்து கர்ப்பமான கல்கி, தாய்மையடைந்திருப்பதை அறிவித்தார். அவருக்கு பிப்ரவரி மாதம் பெண் குழந்தைப் பிறந்தது.

கோலிவுட்டின் மற்றொரு ஜோடி: காதலில் ஆதி-நிக்கி கல்ராணி?

இதனால் குழந்தையை தூங்க வைக்க தமிழில் தாலாட்டு பாடலை பாடியுள்ளார் கல்கி கோச்சலின். கிடார் இசைத்தப்படி அவர் பாடும், ’கனி கண்மணி கண்ணுறங்கு பொன்மணி’ என்ற பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Kalki koechlin tamil thaalattu song goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X