சென்னையில் இறப்பு விகிதம் குறைகிறதா?

ராயபுரம், தண்டையார்பேட்டை, அண்ணா நகர் மற்றும் தேனாம்பேட்டை போன்ற மண்டலங்களில் மீட்பு விகிதம் அதிகமாக உள்ளது. அதாவது இங்கு 80%-க்கும் அதிகமான நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

By: Updated: July 18, 2020, 01:41:05 PM

இரண்டரை வார காலத்தில், கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக,  சென்னை பெருநகர மாநகராட்சியின் தரவு காட்டுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி: சிவப்பு அரிசி ஏன் அவசியம் தெரியுமா?

ஜூன் 28-ம் தேதி, சென்னையின் மீட்பு விகிதம் 59% ஆக இருந்தது. இது எண்ணிக்கையில் 31,858 பேர். புதன்கிழமை, மீட்பு வீதம் 79% ஆக இருந்தது, முழுமையான எண் 64,036. ராயபுரம், தண்டையார்பேட்டை, அண்ணா நகர் மற்றும் தேனாம்பேட்டை போன்ற மண்டலங்களில் மீட்பு விகிதம் அதிகமாக உள்ளது. அதாவது இங்கு 80%-க்கும் அதிகமான நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

மாநகராட்சி கமிஷனர் ஜி.பிரகாஷ் கூறுகையில், ”அதிக பரிசோதனைகள் தான் 80,000 தொற்றுகளை கண்டறிய வழிவகுத்தன. அவர்கள் கண்டறியப்படாமல் இருந்திருந்தால், ஒவ்வொரு நபரும் 20 பேருக்கு வைரசை பரப்பி, 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம்” என்றார்.

அதிக மீட்டெடுப்புகளைக் கொண்ட மண்டலங்கள், ஹாட்ஸ்பாட்களாக இருந்ததாகவும், அங்கு அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் இருந்ததாகவும் தரவு காட்டுகிறது. எனவே, இந்த மண்டலங்களில் மீண்டு வரும் நோயாளிகளில் அதிக சதவீதம் பேர் நகரத்திற்கு அதிக எண்ணிக்கையில் தொற்றை பதிவு செய்தவர்கள்.

புதன்கிழமை, தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் மண்டலங்களில் மீட்பு விகிதம் 87% ஆக இருந்தது. இறப்பு விகிதம் முறையே 2.16% மற்றும் 1.74%. இந்த மண்டலங்களில் தற்போது ஆக்டிவாக இருக்கும் தொற்றுகளின் எண்ணிக்கை 11% மட்டுமே. அதாவது சுமார் 2,000 நோயாளிகள்.

ஐஸ்வர்யா ராய், ஆராத்யா மருத்துவமனையில் அனுமதி

அண்ணாநகர், திரு.வி.க நகர் மற்றும் தேனாம்பேட்டையில் மீட்பு விகிதம் 81% ஆக இருந்தது. மூன்று மண்டலங்களிலும் 4,000 தொற்றுகள் ஆக்டிவாக இருக்கின்றன. அதே நேரத்தில் அங்கு இறப்பு விகிதம் முறையே, ஜூலை 15-ம் தேதி நிலவரப்படி 1.36%, 2.16% மற்றும் 2.23%. வளசரவாக்கம் மண்டலத்தில் 77% மீட்பு விகிதம் இருந்தபோதிலும், அங்கு இறப்பு விகிதம் 1.02%-மாக உள்ளது.  சென்னையின் மிக அதிக இறப்பு விகிதம் திருவெற்றியூர் மண்டலத்தில் தொடர்கிறது. அங்கு கொரோனா நோயாளிகளில் 2.35% பேர் இறந்துள்ளனர். இந்த மண்டலம் 77% மீட்பு வீதத்தைக் கொண்டுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai coronavirus recovery rates increasing covid 19

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X