/tamil-ie/media/media_files/uploads/2020/01/Indian-2-1.jpg)
Kamal Haasan starrer Indian 2 new poster
Kamal Haasan starrer Indian 2 new poster got released : தமிழ் சினிமாவில் திரும்பி பார்க்க வைத்த சில முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கிறது இந்தியன். சங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் அடுத்த பாகம் தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில் கமல் ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ்,பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ் மற்றும் வித்யூத் ஜம்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் காட்சிகள் குவாலியரில் படமாக்கப்பட்டது. அதன் பின்னர் சென்னை வந்த நடிகர் கமல் ஹாசன் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வு பெற்று வருகிறார். நேற்று இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சங்கர். அந்த போஸ்டரை பார்த்து அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த போஸ்டரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Happy New Year !
@ikamalhaasan
@Actor_Siddharth @MsKajalAggarwal @Rakulpreet #BobbySimhaa
@priya_Bshankar @Actor_Vivek @thondankani #Jagan @manobalam #NedumudiVenupic.twitter.com/Sfs2qkYmcE
— Shankar Shanmugham (@shankarshanmugh) December 31, 2019
ரசிகர்கள் கொண்டாட்டம்
2020 is going to be epic #Indian2https://t.co/KfDlAcfWdZ
— TherealKochad (@SheikMDawood) December 31, 2019
Team #Indian2 Wishes everyone a Very Happy New Year @shankarshanmugh@ikamalhaasan@LycaProductionspic.twitter.com/HaFJGHp7mX
— Shankar Fans Club (@TheShankarFans) December 31, 2019
I'm really looking forward for ???? #Indian2pic.twitter.com/dbrcjIkGJN
— Saffy (@saffybari) December 31, 2019
Most awaiting flim#Indian2pic.twitter.com/IUnmCay91P
— Vaiby (@sagarthanekar1) December 31, 2019
இதைவிட எப்படி ஒரு புத்தாண்டை வரவேற்பது என்றும் கமல் மற்றும் சங்கரின் ரசிகர்கள் இந்த போஸ்ட்டரை ஷேர் செய்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த படம் முழுமையுற்ற பிறகு கமல் ஹாசன் வெகுநாட்களாக பெண்டிங்கில் வைத்திருக்கும் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க உள்ளார். முழுமையாக அரசியலில் ஈடுபட விருப்பம் தெரிவித்திருக்கும் கமல் ஹாசனின் இறுதி திரைப்படமாக இது இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.