scorecardresearch

விக்ரம் இசை வெளியீட்டு விழா; எதிர்பார்த்து வராத ரஜினி!

கமலஹாசனின் விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொள்ள உள்ளதாக தகவல்

Kamalhassan’s Vikram movie audio launch Rajinikanth may attend: நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் வராதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் நேற்று (மே 15) நடைபெற்றது.

இதையும் படியுங்கள்: இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம்; ரசிகர்கள், திரைத்துறையினர் வாழ்த்து

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. கமலஹாசனின் நண்பனான ரஜினிகாந்தும் இந்த விழாவில் கலந்துக் கொள்ள உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொள்வதை உறுதி செய்யும் விதமாக, அவர் பெயருடன் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. Kamalhassan’s Vikram movie audio launch Rajinikanth may attend: நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் வராதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Kamalhassans vikram movie audio launch rajinikanth may attend