New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/05/d-imman.jpg)
Music composer D.Imman re-marriage photos goes viral: இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். தமிழில் காதலே சுவாசம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுக டி.இமானுக்கு வெளிச்சம் கொடுத்தது விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் திரைப்படம் தான். பின்னர் விசில், கிரி என தொடர்ச்சியாக ஹிட் பாடல்களை கொடுத்தார்.
சிறிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்த டி.இமான், சமீப காலமாக உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்தவகையில், அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் அண்ணாத்த படங்களுக்கும் டி.இமான் இசையமைத்துள்ளார். இதில், விஸ்வாசம் படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: அட இதையுமா காப்பி அடிப்பிங்க.! இன்றைய சீரியல் மீம்ஸ்
இதனிடையே கடந்த 2008 ஆம் ஆண்டு இமான், மோனிகா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இமான், மோனிகாவை விவாகரத்து செய்தார்.
தற்போது டி.இமான் மறுமணம் செய்து கொண்டுள்ளார். இமான், எமிலி என்பவரை தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.