Advertisment

‘யாரு விடியல பாக்குறதுனு முடிவு பண்றது நான்’; வெளியானது விக்ரம் பட டிரைலர்

விக்ரம் பட டிரைலர் வெளியீடு; ஆக்சன் காட்சிகளில் மிரட்டும் கமலஹாசன்; நடிப்பில் வெறித்தனம் காட்டும் விஜய் சேதுபதி, பகத் பாசில்

author-image
WebDesk
May 15, 2022 21:21 IST
‘யாரு விடியல பாக்குறதுனு முடிவு பண்றது நான்’; வெளியானது விக்ரம் பட டிரைலர்

Kamalhassan’s Vikram movie trailer released: ”இங்க யாரு விடியல பாக்குறதுனு முடிவு பண்றது நான்” என தெறிக்கும் வசனங்களுடன் வெளியாகியுள்ளது, கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் டிரைலர். இந்த டிரைலர் தற்போது யூடியூப்பில் டிரெண்டிங்கில் உள்ளது.

Advertisment

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு இன்று நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்: விக்ரம் இசை வெளியீட்டு விழா; ரஜினி கலந்துக் கொள்வதாக தகவல்

இன்று வெளியிடப்பட்ட விக்ரம் படத்தின் டிரைலர் யூடியூபில் அதிக பார்வைகளை கடந்து வருகிறது. ”காடுனு ஒன்னு இருந்தா… சிங்கம், புலி, சிறுத்தை வேட்டைக்குப் போகும்” என்று கமல் பேசும் வசனத்தோடு ஆரம்பிக்கும் ட்ரெய்லர் போகப்போக ஆக்‌ஷன் காட்சிகளில் நிரம்பியிருக்கிறது. கமல் ஆக்சன் காட்சிகளில் மிரட்ட, விஜய் சேதுபதியும் பகத் பாசிலும் போட்டி போட்டுக்கொண்டு நடித்துள்ளனர். அனிருத்தின் பின்னனி இசை மிரட்டுகிறது. தெறிக்க விடும் டிரைலர் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரைலரை பார்த்த ரசிகர்கள், லோகேஷ் என்னாயா பண்ணி வச்சிருக்க இன்னும் Goosebumps நிக்கலயா என பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Vikram Movie #Tamil Cinema #Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment