Advertisment

kanchana 3 Tamil Movie: காஞ்சனா 3ல் நடித்த ரோஸி, யுவஸ்ரீ யார் தெரியுமா? தமிழ் ராக்கர்ஸில் மட்டும் பார்க்காதீங்க!

Kanchana 3 Movie in TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி இணையதளங்களின் தாக்குதலை மீறி, காஞ்சனா 3 வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kanchana 3 Tamil Movie

kanchana 3 Tamil Movie

kanchana 3 Tamil Movie's successful Box Office Collection over Tamilrockers: காஞ்சனா 3, இணையத்தில் ‘டாப்’ தேடலாக இருக்கிறது. ஒரு பக்கம் தமிழ் ராக்கர்ஸ் இந்தப் படத்தை ஆன் லைனில் வெளியிட்டதால் முழுப் படத்தையும் பார்க்க தேடுகிறவர்கள், இன்னொரு பக்கம் இந்தப் படத்தில் ரோஸியாக நடித்தவர் யார்? சிறுமியாக நடித்தவர் யார்? என எக்கச்சக்க தேடல்கள்!

Advertisment

பேய்க் கதைகளை தொலைக்காட்சித் தொடர்கள், அடுப்பங்கரை வரை கொண்டு சேர்த்ததால்தான் பெரிய திரையிலும் இன்று காஞ்சனா 1, 2, 3 என பட்டையை கிளப்புகிறது. குடும்பம் பெண்கள் மனநிலையை தெளிவாக புரிந்துகொண்ட ராகவா லாரன்ஸ், பேய்க் கதைகளை வைத்து செமையாக வர்த்தகம் செய்கிறார்.

tamilrockers, Kanchana 3 Tamil Movie, காஞ்சனா 3 Kanchana 3 Movie in TamilRockers: இணையதளங்களின் தாக்குதலை மீறி, காஞ்சனா 3 வெற்றி

Kanchana 3 Tamil Movie succeeds over Tamilrockers: இந்தப் படத்தில் ரோஸியாக நடித்தவர் யார்?

இத்தனைக்கும் கடந்த 19-ம் தேதி வெளியான காஞ்சனா 3 படத்திற்கு மீடியாக்கள் நல்ல விதமாக ரிவ்வியூ கொடுக்கவில்லை. தமிழ் ராக்கர்ஸ் முதல் நாளே அந்தப் படத்தை ஆன் லைனில் வெளியிட்டு திணறடித்தது. ஆனாலும் தியேட்டர்களில் வசூல் மழை நிற்கவில்லை.

Read More: Kanchana 3 Movie: ரசிகரின் அலப்பறையைக் கண்டித்த ராகவா லாரன்ஸ்

இன்னொருபுறம், ஆன் லைனில் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி இணையதளங்களில் இந்தப் படத்தைக் காண தேடுதல் வேட்டை நடத்தும் ரசிகர்கள் கூட்டம் இணையத்தில் எகிறுவதாகவே தெரிகிறது. படத் தயாரிப்பு நிறுவனம் இதைக் கண்டு கொள்ளவில்லை என்பதல்ல, எதுவும் செய்ய இயலவில்லை என்பதுதான் எதார்த்தம்.

இதற்கிடையே காஞ்சனா 3 படத்தில் ரோஸியாக நடித்திருக்கும் நடிகை யார்? என்கிற தேடல் பெரிய அளவில் நடக்கிறது. அந்த நடிகை, ரஷ்ய மாடலான ஆர்ஐ ஜாவி அலெக்சாந்திரா. அதேபோல காஞ்சனா 3 படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் யுவஸ்ரீ லட்சுமி குறித்த தகவல்களை அறிவதிலும் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

யுவஸ்ரீ லட்சுமி, காரைக்காலை சேர்ந்தவர். அம்மா கணக்கு படத்துடன் அமலா பாலுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். அப்பா படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனியுடன் நடித்திருந்தார். இப்போது காஞ்சனா 3 படத்திலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி இணையதளங்களின் தாக்குதலை மீறி, காஞ்சனா 3 வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. ரசிகர்களின் நாடித் துடிப்பை சரியாக எடைப்போட்டு வைத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

 

Raghava Lawrence Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment