’தலைவி’ ஜெயலலிதாவாக சிரத்தை எடுக்கும் கங்கனா : தமிழகத்தை சுற்றிய படங்கள்!

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார் கங்கனா

By: Updated: February 25, 2020, 11:30:43 AM

Kangana Ranaut : பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது அடுத்தப்படமான ’தலைவி’ படப்பிடிப்பில் படு பிஸியாக உள்ளார். இந்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக அதிகரித்து வருகின்றன.

ஒரு தார்மீக அறம் வேண்டாமா? சினிமா டைட்டில்களை திருடும் சீரியல்கள்…

kangana Ranaut 5 ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடிய கங்கனா kangana Ranaut 5 தரிசனம் kangana Ranaut 5 மனம் உருகி பிரார்த்தனை kangana Ranaut 5 கோயிலை வலம் வந்த கங்கனா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’யில், தங்களால் முடிந்தளவு உண்மையை அப்படியே சொல்ல முயன்றிருக்கிறோம் என இயக்குநர் ஏ.எல்.விஜய், இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்து இருந்தார்.  இந்நிலையில் தனது பிஸியான ஷெட்யூல்களில், சிறிது நேரம் ஒதுக்கி, தமிழ்நாட்டில் ஒரு மினி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் கங்கனா.

kangana Ranaut 5 அப்துல் கலாம் நினைவிடத்தில்…

இன்றைய செய்திகள் Live : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை கமிஷன் – ரஜினி இன்று ஆஜர் ஆவாரா?…

இந்த சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக, பிரபல ஆன்மிக தளமான ராமேஸ்வரம் கோவிலில் சிவபெருமானிடம் ஆசீர்வாதம் பெற்றுள்ளார் கங்கனா. அதோடு அங்குள்ள புனித நீரிலும் குளித்திருக்கிறார். பெரும் சிவ பக்தரான ராவணனை கொன்று, சீதையை இலங்கையிலிருந்து மீட்டு வந்த ராமன், தனது பாவங்களில் இருந்து விடுபட, ராமேஸ்வரத்தில் ஒரு சிவலிங்கத்தை நிறுவியது ஐதீகம். இந்தக் கோயிலில் தரிசித்த பின்,  இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார் கங்கனா, அந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Kangana ranaut rameshwaram temple visit

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X