/tamil-ie/media/media_files/uploads/2021/04/jayax.jpg)
கங்கனா ரனாவத்தின் பிறந்த தினத்தன்று தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ஜெயாவின் கதாபாத்திரத்தில் நடித்திருந்த கங்கனாவின் நடிப்பை காண இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகவே பலரும் கண்டிருந்தனர். ஆனால் பலரும் தமிழ் மற்றும் இந்தி ட்ரெய்லரில் இருக்கு வேறுபாட்டை கவனித்திருக்க மாட்டீர்கள்.
மொழியும், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வெவ்வேறாக இருக்கின்ற காரணத்தால் இது போன்ற சிறிய சிறிய மாற்றங்களை படத்தில் செய்வதுண்டு. இது தலைவிக்கும் பொருந்தும் தான். கிட்டத்தட்ட ட்ரெய்லரில் அனைத்து காட்சிகளும் அனைத்து வசனங்களும் ஒன்று போலத்தான் இருக்கிறது.
வேதா கதாபாத்திரத்தில் இவரா? இந்தியில் உருவாகிறது விக்ரம் வேதா
ஆனாலும் இறுதியில் வரும் அந்த பெரிய வசனத்தையும் அதற்கு கொடுக்கப்பட்ட காட்சியமைப்பையும் தமிழ் ரசிகர்கள் நிச்சயமாக புரிந்து கொள்வார்கள் என்று தான் தோன்றுகிறது. உங்களுக்கு இன்னும் புரியவில்லை என்றால் மேலே இருக்கும் இந்த படத்தின் இந்தி ட்ரெய்லரை பாருங்கள். ”நீங்கள் என்னை அம்மாவாக பார்த்தால் நீங்கள் என் இதயத்தில் இருப்பீர்கள்; வெறும் பெண்ணாக பார்த்தால்...” என்று வரும் வாக்கியத்தின் நிறைவில், கங்கனாவிற்கு எதிரே இருப்பவர்கள் குனிந்து தலை வணங்கும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.