Chiranjeevi Sarja Death: இந்த 2020-ம் ஆண்டு நம்பமுடியாத பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. இந்நிலையில் பிரபலங்களின் திடீர் மரணம் ரசிகர்களிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 39. இந்த செய்தி கன்னட திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் சமூக ஊடகங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்தில் திறப்பா ? : மத்திய அமைச்சர் பதில்
சிரஞ்சீவி சார்ஜாவும், நடிகை மேக்னா ராஜும் காதலித்து கடந்த 2018, மே மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். மேக்னா ராஜ் தமிழில், ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘உயர் திரு 420’, ‘நந்தா நந்திதா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். ’தப்புத்தாளங்கள்’ சுந்தர்ராஜ், ‘வைதேகி காத்திருந்தாள்’ பிரமிளா ஆகியோரின் மகள் தான் இவர். தமிழை விட, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் அதிகம் நடித்துள்ளார்.
மேக்னாவின் காதல் கணவர் சிரஞ்சீவி, நேற்று தொலைபேசியில் தனது தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தபோது சரிந்து விழுந்ததாக தெரிகிறது. அதன் பின்னர், அவர் சாகர் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, சிரஞ்சீவியின் மனைவி மேக்னா ராஜ் தனது இரண்டாவது மூன்று மாதங்களில் (2-வது ட்ரைமஸ்டர்) கர்ப்பமாக இருப்பதாக தெரிகிறது. இந்தத் தம்பதியினர் தங்களது முதல் குழந்தையின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர். இந்த செய்தி தற்போது ரசிகர்களை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த கட்டத்திற்கு தயாராகும் மக்கள்.. ’அன்லாக்’ விதிகளை அடுக்கிய தமிழக அரசு!
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழ் நடிகரும், மருத்துவருமான சேதுராமன் தனது 36 வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார். கடந்த மே 9-ம் தேதி 31 வயதான மலையாள இயக்குநர், ஜிபித் ஜார்ஜ் மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார். இப்படியான இளம் பிரபலங்களின் மாரடைப்பு மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”