Ajith Daksha Team: உலகையே கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
‘நீங்க உங்க வேலைய பாருங்க’: லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்துக்கு வனிதா ’பளீர்’ பதில்
இந்த உயிர்க்கொல்லி வைரஸை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் முதல் ட்ரோன் தொழில்நுட்பத்தைக் கொண்டு, பல இடங்களில் கிருமி நீக்கம் செய்யும் பணியைத் தொடங்கியது. இதில் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் நடிகர் அஜித்தின் வழிகாட்டுதலின் படி, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட்டது என்பதால், அஜித் மற்றும் அவரது தக்ஷா குழுவுக்கு அனைவரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.
Kudos to Team #Dhaksha, mentored by filmstar #AjithKumar, for developing a way to sanitize large areas against COVID-19 via disinfectant drones.
Time and again, technology has proven to be critical in the fight against #COVID-19!@sugaradhana pic.twitter.com/3hwhciDZdt
— Dr. Ashwathnarayan C. N. (@drashwathcn) June 27, 2020
இப்போது, தக்ஷா குழுவினரின் செயல்பாடுகளை அண்டை மாநிலமான கர்நாடகாவும் பின்பற்றிவருகிறது. தொற்றுநோயை எதிர்த்துப் போராட, இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக கர்நாடக மாநில துணை முதல்வர் டாக்டர் அஷ்வத் நாராயணன் நடிகர் அஜித்தையும் அவரது தக்ஷா டீமையும் பாராட்டியுள்ளார்.
விபத்து, எலும்பு முறிவு..! கொல்லங்குடி கருப்பாயி எப்படி இருக்கிறார்?
அவரது ட்விட்டரில், “கோவிட்-19 க்கு எதிராக பெரிய இடங்களை கிருமிநாசினி மூலம் ட்ரோன்களை பயன்படுத்தி சுத்திகரிக்க வழியை உருவாக்கிய திரைப்பட நட்சத்திரம் அஜித் குமாரால் வழி நடத்தப்பட்ட தக்ஷா அணிக்கு பாராட்டுக்கள். COVID-19-க்கு எதிரான போராட்டத்தில் தொழில்நுட்பம் எவ்வளவு முக்கியமானது என்பதை இது மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது!” என்று பதிவிட்டுள்ளார்.
இது அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.