தனுஷின் அப்பாவுக்கு பாஜக-வில் முக்கியப் பொறுப்பு

நடிகைகள் காயத்ரி ரகுராம், மதுவந்தி, நமிதா, கெளதமி மற்றும் குட்டி பத்மினி ஆகியோருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

By: July 15, 2020, 4:38:26 PM

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக தேசியளவில் ஆளும்கட்சியாக இருக்கிறது. இருப்பினும் தமிழகத்தில் காலூன்ற அக்கட்சி பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. சமீபத்தில் எல். முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போதிலிருந்து வேகமாக செயல்பட்டு வருகிறார்.

கார்ஜியஸ் ராஷ்மிகா, யோகா கேர்ள் ஏமி: புகைப்படத் தொகுப்பு

மாநிலத்தில் அக்கட்சியின் எதிர்காலத்திற்கு ஊக்கத்தை அளிக்க திரைப்பட நட்சத்திரங்களை பெரிதாக எதிர்பார்க்கிறது பாஜக. ஏற்கனவே நடிகைகள் காயத்ரி ரகுராம், மதுவந்தி, நமிதா, கெளதமி மற்றும் குட்டி பத்மினி ஆகியோருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

’பாதுகாப்பு இல்ல’: சன் டிவி சீரியலுக்கு பை பை சொன்ன நடிகை

தற்போது பாஜகவின் எக்ஸிக்யூட்டிவ் மெம்பர் பதவிகளுக்கு நடிகர்கள் ராதா ரவி மற்றும் இயக்குநர்கள் கங்கை அமரன், கஸ்தூரி ராஜா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கஸ்தூரி ராஜா முன்னணி நடிகர் தனுஷின் தந்தை. அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சம்மந்தியாகவும் இருக்கிறார். இது நிச்சயமாக வரும் நாட்களில் ஊடகங்களில் நிறைய யூகங்களுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Kasthuri raja gets bjp executive committee member posting

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X