Advertisment
Presenting Partner
Desktop GIF

கொரோனா முடக்கம்: விவசாயத்தில் இறங்கிய இளம் தமிழ் நடிகை

"இது எங்கள் தனிமைப்படுத்தப்பட்ட குடும்ப சொத்துக்குள் உள்ளது, பொது பகுதி அல்ல"

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Keerthy Pandian Farming

Keerthy Pandian Farming

கொரோனா வைரஸ் முடக்கம், மக்களை ஒரே இடத்தில் அடைத்து வைத்து மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் வீட்டிலேயே தங்கியிருப்பது மட்டும் தான் இந்த ஆபத்தான தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரே வழி. இந்நிலையில் பிரபலங்கள் தங்கள் நேரத்தை மிகவும் சுவாரஸ்யமாக்குவதற்கான, புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். பலர் நடனமாடவும், சமைக்கவும் நேரம் செலவிட்டு வரும் நிலையில், ஒரு இளம் கதாநாயகி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

Corona Updates Live : சென்னை டிஜிபி அலுவலகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா

பிரபல நடிகர் - தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் விவசாயம் செய்ய முயன்று, தனது அக்கா மகளுடன் சேர்ந்து நீர் படுக்கையில் ஒரு நெற் பயிரை நடவு செய்கிறார். "நான் செய்த மிக சிறந்த விஷயங்களில் ஒன்று! கைவினைக் கற்றல், இதற்காக த்ரியா பாப்பாவை கூப்பிட வேண்டியிருந்தது" என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை அவரது அப்பா அருண் பாண்டியன் படம்பிடித்ததாகவும், "(மீண்டும், இது எங்கள் தனிமைப்படுத்தப்பட்ட குடும்ப சொத்துக்குள் உள்ளது, பொது பகுதி அல்ல)" என்றும் தெரிவித்திருக்கிறார். கீர்த்தி இதற்கு முன்பு தனது வயலில் ஒரு டிராக்டரை ஓட்டினார்.

,

சென்னை புளியந்தோப்பு பகுதியில் இவ்வளவு பாதிப்பா? : அதிர்ச்சியில் மக்கள்

கீர்த்தி பாண்டியன் 'தும்பா' படத்தில் நடித்தார். இரண்டாவது படமாக மலையாள ஹிட் 'ஹெலன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இதில் அருண் பாண்டியன் கீர்த்தியின் ரீல் அப்பாவாகவும் நடிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment