நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழில் பேசுங்க என்ற கேட்டதற்கு அவர் அளித்த பதில் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் அவர் நானி உடன் இணைந்து நடித்த பான் இந்திய படமான தசரா பெரிய வெற்றி பெற்றது. தற்போது அவர் உதயநிதி ஸ்டாலின் உடன் நடித்த ‘மாமன்னன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: நல்லிணக்கம் இல்லாத சூழல் உருவாகி வரும் நேரத்தில் இதுபோன்ற வசனங்கள் தேவை; கோவையில் நடிகர் ஆர்யா பேட்டி
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தந்தை சுரேஷ்குமார், தாய் மேனகா, சகோதரி ரேவதி சுரேஷ் ஆகியோருடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார். வி.ஐ.பி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷூக்கு கோவில் நிர்வாகிகள் தீர்த்த பிரசாதங்களை அளித்து வேத ஆசியும் வழங்கினார்கள்.
இந்த நிலையில் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி சுரேஷ், ”நீண்ட நாட்களுக்குப் பிறகு திருப்பதி ஏழுமலையானை வழிபடுவது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது, எனது சகோதரி ரேவதி குறும்படம் இயக்கி இருக்கிறார், நானும் தெலுங்கில் ‘போலோ சங்கர்’ படத்தில் நடித்து வருகிறேன்,” என்று கூறினார். அப்போது தமிழில் பேசுமாறு செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, ’திருப்பதியில் இருக்கேனே’ என்று கூறி மீண்டும் தெலுங்கில் பேசினார். இந்தப் பதில் இப்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil