மீண்டும் வைரல் போட்டோஸ்; கீர்த்தி சுரேஷுடன் நெருக்கமான நண்பர் யார்?

கீர்த்தி சுரேஷ் சமீபத்திய போட்டோ சமூக வலைதளங்களில் வைரல்; காதலரா என ரசிகர்கள் கேள்வி

கீர்த்தி சுரேஷ் சமீபத்திய போட்டோ சமூக வலைதளங்களில் வைரல்; காதலரா என ரசிகர்கள் கேள்வி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Keerthy Suresh opens up about the man who came to see him

Actress Keerthi Suresh

கீர்த்தி சுரேஷ் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, அவர் கீர்த்தியின் காதலரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisment

தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், ரஜினி முருகன், பைரவா, சண்டக்கோழி 2, சாமி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மகாநடி திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷூக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் ரிலீஸூக்கு தயாராக உள்ளது. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: அடிப்பாரு… கன்னா பின்னான்னு கத்துவாரு..! மாரி செல்வராஜ் பற்றி உதயநிதி ஷாக்

இதற்கிடையே சமீபகாலமாக கீர்த்தி சுரேஷின் காதல் குறித்து அடிக்கடி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில், சிறுவயது நண்பரான ஃபர்ஹான் என்பவரை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. மேலும் சமீபத்தில் ஃபர்ஹானுக்கு பிறந்தநாள் வாழ்த்து கீர்த்தி சுரேஷ் சொல்லியதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்வது உறுதி என கூறப்பட்டது. ஆனால் இதனை கீர்த்தி சுரேஷ் மறுத்துவிட்டார்.

Advertisment
Advertisements

சமீபத்தில் நடந்த மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதிலேயே கவனமாக இருக்கீங்களே. திருமணம் செய்துகொண்டால் அதை நானே சொல்கிறேன் என கீர்த்தி சுரேஷ் கூறியிருந்தார்.

இந்தநிலையில் கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படத்தால் அவரது காதல் குறித்த செய்தி மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கீர்த்தி சுரேசை ஒருவர் அணைத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் ஒருவேளை இவர்தான் கீர்த்தி சுரேஷின் காதலராக இருப்பாரோ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதேநேரம், ஒரு ஆண் ஒரு பெண்ணை அணைத்திருந்தால் அவர் காதலராகத்தான் இருக்க வேண்டுமா நண்பராக இருக்கக்கூடாதா என சில ரசிகர்கள் பதில் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கிடையே கீர்த்தியின் காதல் கிசுகிசுவால் நாங்கள் மன உளைச்சலில் இருக்கிறோம் என கீர்த்தி சுரேஷின் தந்தை கூறியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Keerthy Suresh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: