KGF 2 movie twitter reviews and fans reactions: மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட கே.ஜி.எஃப் 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், விஜய்யின் பீஸ்ட் படத்துடன் பாக்ஸ் ஆபிஸில் மோதி வருகிறது.
கடந்த 2018ல் வெளியாகி, இந்தியா முழுவதும் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ளது. யாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில், சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீணா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.
படம் குறித்து நடிகர் யாஷ் கூறுகையில், “வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்த ஒரு தாயின் கதை, தன் மகன் தன்னைப் போல் வாழக்கூடாது என்று விரும்புகிற கதைதான் கேஜிஎஃப். அவர் இறக்கும் போது அவர் பணக்காரராக இருக்க வேண்டும் என்று அந்த தாய் விரும்புகிறாள். இது முழு நாட்டிற்கும் பொருந்தக்கூடிய விஷயம் என்று கூறியுள்ளார்.
இதனிடையே இன்று படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் தமிழின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய்யின் பீஸ்ட் படத்துடன் கேஜிஎஃப் 2 மோதி வருகிறது.
”’பாகுபலி’ திரைப்படம் பிரபாஸை பாலிவுட்டை விட உயர்த்தியது. ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை பாலிவுட்டை விட உயர்த்தியது. இதேபோல், ’கேஜிஎஃப் 2’ திரைப்படம் யாஷை பாலிவுட்டை விட உயர்த்தியுள்ளது” என ட்விட்டரில் ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: ரஜினி வீட்டு முன் திரண்ட ரசிகர்கள்.. 15 வருடத்தை கடந்த வீஜே.. மேலும் செய்திகள்
”கேஜிஎஃப் முதல் பாகம் முடியும் இடத்தில் இருந்து, இரண்டாம் பாகம் தொடர்கிறது. அருமையான திரைப்படம். நிறைய ட்விஸ்ட் மற்றும் திருப்பங்களைக் கொண்டுள்ளது. இண்டர்வெல் காட்சிகள் ரசிகர்களை சிலிர்க்கச் செய்கின்றன. படத்தின் க்ளைமாக்ஸ் சமீப காலத்திய திரைப்படங்களில் பெஸ்ட் ஆக உள்ளது. திரையரங்குகளில் பார்க்க வேண்டிய அற்புதமான படம்” என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.
”ரவீணாவின் கதாப்பாத்திரம் அருமை. யாஷ் மற்றும் சஞ்சய் தத் காட்சிகள் விருந்தளிக்கிறது. தியேட்டரில் பாருங்கள்” என்று மற்றொரு ட்விட்டர்வாசி பதிவிட்டுள்ளார்.
”இயக்குனர் பிரசாந்த் நீல்க்கு சலாம்! டூஃபான் பாடலுடன் அருமையான தொடக்கம், கார் சேஸிங் காட்சிகள் மற்றும் ஆதிரா கதாப்பாத்திரத்தின் காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கிறது. ராஷ்மிகா சென்னின் அருமையான நடிப்புடன் சூப்பரான இரண்டாம் பாதி. ப்ளாக்பஸ்டர் ஹிட்” என இன்னொரு ட்விட்டர்வாசி பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil