scorecardresearch

உதயநிதியை பிழிந்து எடுக்கிறாராம் அவர்… மகிழ்ச்சி தெரிவிக்கும் கிருத்திகா!

உதயநிதி ஸ்டாலினை பிழிந்து எடுக்கும் இயக்குனர்… சந்தோஷத்தில் கிருத்திகா உதயநிதி

உதயநிதியை பிழிந்து எடுக்கிறாராம் அவர்… மகிழ்ச்சி தெரிவிக்கும் கிருத்திகா!

Kiruthiga happy about Udhayanidhi stalin difficult work in movies: என்னால் முடியாததை இயக்குனர் மாரி செல்வராஜ் செய்கிறார், அவர் உதயநிதியை நன்றாக பிழிந்து எடுக்கிறார் என உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி கூறியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அப்பாவாக வடிவேலு நடிக்கிறார். பிரபல மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: கையில் சிகரெட் உடன் போட்டோ… சர்ச்சையில் ராதிகா சரத்குமார்!

இந்தநிலையில், உதயநிதி ஸ்டாலின் மனைவியும் இயக்குனருமான கிருத்திகா உதயநிதி ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்தபோது, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கிருத்திகா உதயநிதி, இந்த படத்தை பற்றி ஏதாவது கூறினால் மாரிசெல்வராஜ் என்னை போன் போட்டு திட்டுவார், அதனால் எதுவும் சொல்ல முடியாது என உதயநிதி கூறிவிட்டார், என்று கிருத்திகா கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் உதயநிதியை மாரி செல்வராஜ் நன்றாக பிழிந்து எடுக்கிறார், என்னால் செய்ய முடியாததை மாரி செல்வராஜ் செய்கிறாரே என்று நினைத்து எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று கிருத்திகா நகைச்சுவையாகக் கூறினார்.

மேலும் தனது மகன் இன்பநிதி தற்போது தமிழ் படங்களை எல்லாம் பார்க்க ஆரம்பித்து உள்ளார். பீஸ்ட்’ படத்தின் அதிகாலை 4 மணி காட்சியை தனது நண்பர்களுடன் பார்த்தார். சில மாதங்களாக அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், இப்பொழுதுதான் பிளஸ் 2 முடித்திருக்கிறாய், முதலில் டிகிரி படித்து முடி என்று நாங்கள் கூறியுள்ளோம். மேலும், நடிப்பது ஒன்றும் அவ்வளவு ஈஸி கிடையாது என்றும் நாங்கள் கூறியுள்ளோம். ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளை நாங்கள் கண்ட்ரோல் செய்ய மாட்டோம். அவர்கள் என்னவாக விரும்புகிறார்களோ, அதுவாகவே ஆகட்டும் என்றும் நாங்கள் விட்டு விடுவோம், என்றும் கிருத்திகா கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Kiruthiga happy about udhayanidhi stalin difficult work in movies