New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/07/radhika.png)
நடிகை ராதிகா சரத்குமார் கையில் சிகரெட் உடன் வெளியான போஸ்டர் இணையத்தில் வைரல்
Radhika sarathkumar latest photo goes viral: நடிகை ராதிகா சரத்குமார் கையில் சிகரெட் உடன் வெளியாகியுள்ள திரைப்பட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் முன்னனி நாயகியாக வலம் வந்தவர் ராதிகா. இவர் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துள்ளார். தற்போது திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: கலைஞர் குடும்பத்தின் அடுத்த ஹீரோ… கிருத்திகா உதயநிதி வெளியிட்ட ரகசியம்
தற்போது, இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்து வருகிறார். த்ரில்லர் படமாக உருவாகி வரும் கொலை படத்தை விடியும் முன் பட இயக்குனர் பாலாஜி குமார் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்து வருகிறார். இவர்களுடன் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், அர்ஜூன் சிதம்பரம் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது படக்குழு அடுத்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ரேகா - தி பாஸ் ஆக நடித்து வரும் ராதிகா சரத்குமார் கையில் சிகரெட் உடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு தரப்பினர் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் காட்சிகளில் நடிப்பதை திரைத்துறையினர் தவிர்க்க வேண்டும் என கூறி வரும் நிலையில், இந்த போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.