ஜெயலலிதா இந்நேரம் பிரைம் மினிஸ்டர் ஆகியிருப்பாங்க - சரோஜா தேவி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் அவர் இருக்கும் படம் திரையிடப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் அவர் இருக்கும் படம் திரையிடப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kodeeswari Saroja Devi

Kodeeswari Saroja Devi

Colors Kodeeswari : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பெண்களுக்காக மட்டும் பிரத்யேகமாக ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் பெண்கள் பலர் கலந்துக் கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்கள். அவ்வப்போது இதில் சினிமா பிரபலங்களும் கலந்துக் கொண்டு சிறப்பிப்பார்கள்.

Advertisment

Oru Kutti Kathai Live Updates : தளபதி சொல்லப்போற அந்தக் ‘குட்டிக்கதை’ யாருக்கு?

Advertisment
Advertisements

சமீபத்தில் நடிகை மீனா கலந்துக் கொண்டு, தனது திரை அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டார். இந்நிலையில் பழம் பெரும் நடிகை, சரோஜா தேவி கலந்துக் கொண்டார். அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் அவர் இருக்கும் படம் திரையிடப்பட்டது. அதைப் பார்த்த சரோஜா தேவி, “நான் எப்போ சென்னை வந்தாலும் அவங்க வீட்டுக்குப் போவேன். அவங்க இன்னைக்கு இருந்திருந்தா பிரைம் மினிஸ்டரா இருந்திருப்பாங்க.

கம்பத்துல என் குரு ஒருத்தர் காலேஜ் இல்லன்னு அவங்கக்கிட்ட சொல்ல சொன்னாரு. நான் சென்னை வந்தப்போ அவங்கக்கிட்ட சொன்னேன். அப்போ அந்த இடத்தோட பேரு கூட எனக்கு சொல்ல வரல. கம்பம்ன்னு சொன்னதும், ’ஆமா மதுரைல இருந்து 125 கிலோ மீட்டர். அங்க முழுவதும் ஏலக்காய் தோட்டம் தான் இருக்கும். காலேஜ் இல்லன்னாங்க’ அவங்க ஞாபக சக்தியைப் பாத்துட்டு வாயடைச்சு போய்ட்டேன்” என்றார்.

தமிழக பட்ஜெட் 2020 : யாருக்கும் பத்தாத பட்ஜெட் – ஸ்டாலின் ; வாசன் வரவேற்பு

அதோடு, எப்போதும் தனது தங்க நகைகளை அணிந்துக்கொண்டு தான் சரோஜா தேவி நடிப்பாராம். இதை நினைவு கூர்ந்து ராதிகா கேட்டபோது ஆமாம் என்றும் சொன்னார். புரடக்ஷன் சாப்பாட்டுக்கு காத்து இருந்ததில்லை என்றும் சொன்னர்.

Tv Show

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: