/tamil-ie/media/media_files/uploads/2018/08/kolamaavu-kokila.jpg)
kolamaavu kokila
kolamaavu kokila : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடல் வீடியோவில் இசையமைப்பாளர் அனிருத் நடித்துள்ளார்.
kolamaavu kokila : கோலமாவு கோகிலா படத்தின் திட்டம் போட தெரியல பாடல்:
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயந்தாரா, யோகிபாபு, ஜேக்கலின் மற்றும் சரண்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘கோலமாவு கோகிலா’ இந்தத் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இதற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன்.
கோலமாவு கோகிலா படத்தின் கதையில் இருக்கும் டுவிஸ்ட் இது தானா?
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘ திட்டம் போட தெரியல ’ என்ற பாடல் வீடியோ இன்று வெளியானது. இந்த பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை அப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Here we go - #ThittamPodaTheriyala promo video - https://t.co/4tkPvXaoDo
Hope you enjoy it :) #KolamaavuKokila from Aug 17th :)
Thank you so much @VigneshShivN for this video :) You are special ????#Nayanthara@Nelson_director@LycaProductions@zeemusicsouth
— Anirudh Ravichander (@anirudhofficial) 5 August 2018
இந்த பாடல் வீடியோவில் நடித்துள்ள அனிருத், ஒரு டான் போல காட்சியளிக்கிறார். எதிரே வரும் எதிரிகளை கையில் வைத்துள்ள கட்டையை வைத்து அடித்து விரட்டுகிறார். மேலும் சுற்றியிருக்கும் அனைத்து பொருட்களையும் கோவத்தில் சுக்கு நூறாக உடைத்தெரிகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, ஒரு வேளை இவர் அந்த படத்தில் நடித்திருப்பாரோ? இவரின் கடத்தல் திட்டம் நயன்தாரா பலிக்காமல் போயிருக்குமோ என்றெல்லாம் தோன்றுகிறது.
கோலமாவு கோகிலா படத்தில் அனிருத் நடித்திருக்கிறார் என்ற செய்தி ஒன்று வெகு நாட்களாகவே காற்றில் பரவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.