scorecardresearch

துல்கர் படத்தின் டிரைலர்.. வலிமை படத்தின் புதிய வீடியோ.. மேலும் சினிமா செய்திகள்

இவர் ஃபர்ஹான் அக்தரின் நல்ல நண்பராவார். தொடர்ந்து அவரை ஆதரித்து வருபவர்.

துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் டிரைலர் யூ-டியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

நடன பயிற்சியாளர் பிருந்தா கோபால் இயக்குநராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.

அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால், கே.பாக்கியராஜ், சுஹாசினி மணிரத்னம், குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்த திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு யூ சான்றிதழ் வழங்கியுள்ளது

இந்த திரைப்படம் மார்ச் மாதம் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி திரைக்கதை மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்துள்ளார். 

டிரைலர் இதுவரை 40 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

பாக்கும் போதே மனசுல ஏதோ feel ஆகுது என்று ரசிகர் ஒருவர் கமென்ட் செய்துள்ளார். மேலும் பல ரசிகர்கள் திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளர்.

வலிமை படத்தின் புதிய வீடியோ

முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் ‘வலிமை’.

இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.

‘வலிமை’ திரைப்படம் வரும் பிப்ரவரி 24 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே

வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் புதிய விடியோவை தயாரிப்பாளர் போனி கபூர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 

அந்த வீடியோவில் அஜீத் குமாரின் அதிரடி சண்டை காட்சி ஒன்று உள்ளது.

இசையமைப்பாளர் பப்பி லஹரி இறுதிச் சடங்கு

உயிரிழந்த பிரபல பாலிவுட் இசையமைப்பாளரும், பாடகருமான பப்பி லஹரியின் இறுதிச்சடங்கு மும்பையில் நடந்து முடிந்தது.

அமெரிக்காவில் இருந்து அவர்களது குடும்பத்தினர் இந்தியா திரும்பிய பிறகு இறுதிச் சடங்கு நடைபெற்றது.

பிரபல பாலிவுட் திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹரி உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த ஆண்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பப்பி லஹரி கொரோனாவில் இருந்து மீண்டாலும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டார். 

உடல் நலக்குறைவு காரணமாக பப்பி லஹிரி கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமையன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ஆனால் செவ்வாய்க்கிழமை அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததால், அவரை மறுபடியும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாலிவுட்டில் டிஸ்கோ டான்சர், ஹிம்மத்வாலா, ஷராபி, அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டார்ஜான், ஆஜ் கே ஷஹேன்ஷா, தானேதார், நம்பி ஆத்மி, ஷோலா அவுர் ஷப்னம், டான்ஸ் டான்ஸ், சத்யமேவ் ஜெயதே, கமாண்டோ போன்ற திரைப்படங்களுக்கு  இசையமைத்துள்ளார். தமிழிலும் இவர் பாடும் வானம் பாடி என்கிற படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ரண்பீர் கபூரை நான் மிகவும் நேசிக்கிறேன்: அலியா பட்

நடிகர் ரண்பீர் கபூரை நான் மிகவும் நேசிக்கிறேன். இந்த உறவில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று பாலிவுட் நடிகை அலியா பட் தெரிவித்தார்.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:

கங்குபாய் கதியாவாடி படம் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படமாகும்.  இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் படம் மற்றும் அந்தப் படங்களில் ஒளிப்பதிவு எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவர் காட்டும் அர்ப்பணிப்பு ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றி அழகாக்கி விடும். கங்குபாய் படமும் அதே மாதிரிதான்.

இதையும் படியுங்கள்: கார் ஓட்டிக் கொண்டு இதைச் செய்யலாமா? இயக்குனர் மிஷ்கின் மீது ஒரு புகார்!

மாஃபியா ராணியாக அந்தப் படத்தில் நடித்துள்ளேன். சிலர் இந்த கதாபாத்திரத்துக்கு நான் சரியாக இருக்க மாட்டேன் என்று நினைத்தார்கள். எனக்குமே கதையை கேட்ட பிறகு இந்த சந்தேகம் இருந்தது. என்னால் இத்தகைய கனமான கதாபாத்திரத்தை

செய்ய முடியுமா என்று யோசித்தேன்.  ஆனால் அந்த சவாலை ஏற்று செய்து முடித்தேன்.

நான் ரண்பீர் கபூரை மிகவும் நேசிக்கிறேன். இந்த உறவில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்றார் அலியா பட்.

பிரபல நடிகர் ஃபர்கான் அக்தரின் திருமணத்தில் பங்கேற்பவர்களின் லிஸ்ட்

பாக் மில்கா பாக், டூஃபான் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் ஃபர்கான் அக்தர், பாடகி ஷிபானி தந்தேகரின் திருமணம் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் திருமணத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களின் விவரம் இதோ..

டான் 2 படத்தை தயாரித்த ரிதேஷ் சித்வானி, ஃபர்ஹானின் நெருங்கிய நண்பராவார். மேலும் அவரது பிசினஸிலும் பார்ட்னராக உள்ளார். எனவே விருந்தினர் லிஸ்டில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் பெயரும் உள்ளது.

இவர் ஃபர்ஹான் அக்தரின் நல்ல நண்பராவார். தொடர்ந்து அவரை ஆதரித்து வருபவர்.

ஷிபானி தந்தேகருக்கு நல்ல தோழி என்பதால் நடிகை ரியா சக்ரவர்த்தியும் இந்த விருந்தினர் லிஸ்டில் இடம்பிடித்துள்ளார்.

நடிகர் அமீர் கான், பாக் மில்கா பாக் படத்தை இயக்கிய ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, நடிகை அலியா பட் உள்ளிட்டோரும் இந்த லிஸ்டில் உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Kollywood bollywwod cinema updates roundup stories412826