Lakshmi Menon: நடிகை லட்சுமி மேனன் கும்கி மற்றும் சுந்தர பாண்டியன் ஆகிய திரைப்படங்களுடன் கோலிவுட்டில் நுழைந்தார். அதோடு குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், வேதாளம், கொம்பன் போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தார்.
டிக் டாக்கில் ரகளை செய்த ப்ரீத்தி: இப்போ இன்ஸ்டாவில் படு பிஸி!
மிருதன் மற்றும் றெக்க ஆகிய திரைப்படங்களில் கடைசியாக நடித்த லட்சுமி மேனன் அதன் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இப்போது அவர் பல சுவாரஸ்யமான கதைகளுடன் மீண்டும் நடிக்க தயாராகிவிட்டார்.
சமீபத்தில், லட்சுமி மேனன் ஒரு புதிய போட்டோ ஷூட்டின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது அவரை ஒரு புதிய தோற்றத்தில் காட்டியது. இப்போது ஒரு திறமையான நடனக் கலைஞராக தன்னை நிரூபிக்கும் வகையில், குச்சிபுடி நடனம் ஆடும் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு லட்சுமி மேனனின் அற்புதமான நடன திறனை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”