/tamil-ie/media/media_files/uploads/2019/01/soundarya-rajinikanth-remarriage-1.jpg)
soundarya rajinikanth remarriage, சவுந்தர்யா ரஜினிகாந்த்
சவுந்தர்யா ரஜினிகாந்த் திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதையொட்டி போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு லதா ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவிந்தர்யா ரஜினிகாந்த். முதல் திருமணம் பிரிவில் முடிந்த காரணத்தால், இவருக்கு மறுமணம் செய்து வைக்கும் முடிவில் ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் இறங்கினர்.
இந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. விசாகன் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் ஆவார், விசாகனும் விவாகரத்து பெற்றவர். விசாகன் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். வஞ்சகர் உலகம் எனும் படத்திலும் நடித்துள்ளார்.
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் பாதுகாப்பு
அடுத்த மாதம் 10,11 தேதிகளில் சென்னையில் உள்ள பெரிய மண்டபத்தில் சௌந்தர்யா -விசாகன் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர்.
திருமணத்திற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை E3 காவல் நிலையத்திற்கு சென்று ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் வரும் 10 தேதி அன்று எங்களது மகள் சௌந்தர்யா திருமணம் போயஸ் கார்டன் வீட்டில் நடைபெற உள்ளதால் இந்த கல்யாண விழாவில் விவிஐபிகளான சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர், ஆகையால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி வீட்டில் டும் டும் டும்... திருப்பதியில் சௌந்தர்யா ரஜினிகாந்த் கல்யாணப் பத்திரிக்கைக்கு பூஜை
அந்த மனுவில் பிப்ரவரி 10 ஆம் தேதி மதியம் 3 -10 வரை மாப்பிள்ளை அழைப்பு நடைபெறும் என்றும், பின்னர் பிப்ரவரி 12 ஆம் தேதி வரவேற்பு நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.