ரஜினி வீட்டில் டும் டும் டும்... திருப்பதியில் சவுந்தர்யா ரஜினிகாந்த் கல்யாணப் பத்திரிக்கைக்கு பூஜை

ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யாவுக்கு விரைவில் மறுமணம்

ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், திருப்பதிக்கு சென்று தனது கல்யாண பத்திரிக்கைக்கு பூஜை செய்து குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா, சென்னையை சேர்ந்த தொழிலதிரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், இருவரும் தனிப்பட்ட காரணத்திற்காக விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிரிவுக்கு பிறகு மகன் வேத், குடும்பம் மற்றும் திரைப்படம் இயக்குவதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் :

இந்த நிலையில், கோவையை சேர்ந்த தொழிலதிபரின் மகனும் நடிகருமான விசாகன் என்பவரை சவுந்தர்யா திருமணம் செய்ய இருக்கிறார். அமெரிக்காவில் எம்.பி.ஏ., முடித்த விசாகன், தமிழகத்தில் மருந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அத்துடன் சமீபத்தில் வெளியான ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினர் ஒப்புதலுடன் இந்த திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது.  இரு வீட்டாரும் முடிவு செய்து, கடந்த மாதம் எளிமையான முறையில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்தனர். இவர்களுடைய திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

நடிகரை மறுமணம் புரியும் சௌந்தர்யா ரஜினிகாந்த்?

தற்போது, சவுந்தர்யாவின் இரண்டாவது திருமணத்திற்கான அழைப்பிதழ் தயாராகியுள்ளது. திருமண அழைப்பிதழை திருப்பதி ஏழுமலையான் கோவில் வைத்து சவுர்ந்தர்யா நேற்று முன் தினம் பூஜை செய்தார். அவருடன் லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட அவரது நெருங்கிய உறவினர்கள் சுமார் 20 பேர் சென்றார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close