சென்னையில் பிரபல நடிகை சென்ற காரில் இருந்த மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
முட்டுக்காடு சோதனைச் சாவடியில் நடிகைக்கு சொந்தமான டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை (டி.என் .07 சி.க்யூ 0099) தடுத்து நிறுத்திய போலீஸார், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகாபலிபுரம் மார்க்கத்திலிருந்து இருந்து சென்னைக்கு வரும் வாகனங்களை தாங்கள் சோதனை செய்வதாக தெரிவித்தனர். வாகனத்தை சரிபார்க்க வேண்டும் என்று போலீஸார், அந்த ராஜமாதா நடிகையிடம் கூறினர். அதற்கு காரில் இருந்த அந்த நடிகையும் அவரது தங்கையும் சம்மதித்துள்ளனர்.
க்யூட் ஹன்சிகா, ஸ்டன்னிங் ஸ்ருதி ஹாசன் – முழு புகைப்படத் தொகுப்பு
சோதனையில் அந்த காரில் 96 பீர் பாட்டில்கள், 8 மதுப்பாட்டில்கள் இருந்துள்ளன. உடனே போலீஸார், இது தொடர்பாக அந்த காரை ஓட்டி வந்த சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். அதோடு ஊரடங்கு அமலில் இருக்கும் சென்னைக்கு மதுபானம் கொண்டு செல்வது, முடக்க விதிகளுக்கு எதிரானது என்பதால், சட்ட அமலாக்க குழு அந்த மது பாட்டில்களைக் கைப்பற்றியது.
பின்னர் டிரைவர் கனாத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிப்பட்ட ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். “நடிகை தானே தனது வாகனத்தை கனாத்தூர் காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றதாக” போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பேராசிரியர் அன்பழகன் மகள் மரணம்; திமுகவினர் அஞ்சலி
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், பிரபலங்கள் உட்பட, அதிகளவில் மது வாங்குபவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தன. அடுத்த வாரம் சென்னையில் மற்றொரு முழுமையான முடக்கம் பற்றிய வதந்திகளால் அண்டை மாவட்டங்களில் இருந்து மதுவை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Liquor bottles smuggling beer alcohol bottles seized from tamil actress
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி