'ஒரு பெயரைக் கூட ஒழுங்கா போடத் தெரியாதா?' - விஜய் டிவியை வறுத்தெடுத்த 'லொள்ளு சபா' நடிகர்

கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழல் உள்ளது. அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இன்டர்நெட், டிவி, புத்தகம் என இவை தான் முடங்கியிருக்கும் மக்களின் ஆறுதலாக இருக்கின்றன. குறிப்பாக தொலைக்காட்சியில் சீரியல்களின் ஷூட்டிங் எடுக்க முடியாததால், தங்களது பழைய ஹிட் தொடர்களை டிவி சேனல்கள் மறு ஒளிபரப்பு செய்து வருகின்றன.

நான்கு மாடி கட்டிடத்தை கொரோனா தடுப்பு பணிக்கு கொடுத்த ஷாருக் கான்

அதேபோல் விஜய் டிவி தனது ஆல் டைம் காமெடி ஹிட் ஷோவான லொள்ளு சபாவை மீண்டும் ஒளிரப்பி வருகிறது. 90’ஸ் கிட்ஸ்களின் மோஸ்ட் பேவரைட் ஷோக்களில் இதுவும் ஒன்று.

இதற்கான புரமோவை விஜய் டிவி சமீபத்தில் ஒளிபரப்பியது. இதில், லொள்ளு சபாவில் நடித்து நடிகர் சேஷுவின் பெயர் சாஷா என்று தவறாக இடம் பெற்றிருந்தது.


இதுகுறித்து நடிகர் சேஷு தனது பேஸ்புக்கில், ”

Vijay tv இன்றைய லட்ஷனம்

ஒரு பெயரைக்கூட உங்களால சரியா போட முடியாது இதுல லொள்ளுசபா Part 2 வேறு

நீங்க Part 10 கூட செய்யுங்க ஆனால் எங்க இயக்குனர் ராம்பாலா பெயரோ அதில் நடிக்காத எங்களைப் போன்றவர் பெயரையோ தப்பு தப்பா போட்டு சொதப்பிடாதீர்

ஒரு Promo சரியா போடத்தெரியலை பெயரிலேயே சொதப்பல் (நான் படிப்பறிவில்லாதவன் தவறாய் இருந்தால் பரவாயில்லை மக்கு படித்தவர்கள் பங்கமாய் அதுவும் ஒருநிகழ்ச்சி டைட்டில்)

நல்ல வேளை

Lalaji (balaji)
Sandanam(santhanam)
Jaava(jaava)
Veerappan (manohar)
Maminadhan (swaminadhan)
Tester (easter)
Kadhai(udhai) -னு போடாமே விட்டீங்களே”

 என்று தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவி லொள்ளு சபாவின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close