”நீங்களும், ஷங்கரும் தானே படப்பிடிப்பில் கேப்டன்களாக இருந்தீர்கள்?” – கமலுக்கு லைகா பதில்

முழு படப்பிடிப்பும் உங்கள் கட்டுப்பாட்டிலும், ஷங்கரின் கட்டுப்பாட்டிலும் தான் இருந்தது என்பதை நினைவூட்ட கடினமாக உள்ளது.

Kamal Haasan, indian 2 accident, lyca productions
Kamal Haasan, indian 2 accident, lyca productions

Lyca’s Reply to Kamal Haasan : இந்தியன் 2 விபத்து குறித்து, அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி படத்தின் தயாரிப்பு நிறுவனமான, லைகாவுக்கு பிப்ரவரி 22-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார் நடிகர் கமல் ஹாசன். இதற்கு பதில் கடிதத்தை, நேற்று (26.02.2020) ட்விட்டரில் வெளியிட்டது லைகா. இந்தியன் 2 படபிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில், மூன்று பணியாளர்கள் இறந்தனர். ஊழியர்களுக்காக லைகா நிறுவனம் எடுத்த காப்பீட்டைப் பற்றியும் அந்தக் கடிதத்தில் கேள்வி எழுப்பியிருந்தார் கமல் ஹாசன்.

இன்றைய முக்கிய செய்திகள் Live : நீதிபதி முரளிதரன் இடமாற்றம், பிரியங்கா காந்தி கண்டனம்

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் நீல்காந்த் நாராயன்பூர் தற்போது கமலுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் “நாங்கள் உங்கள் அலுவலகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம், உங்களுக்கு பிறகு 15 நிமிடங்கள் கழித்து சவக்கிடங்கிற்கு வந்தோம். அந்த சமயத்தில், இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும், காயமடைந்தவர்கள் அவர்களின் சிகிச்சையை கவனித்துக் கொள்வதற்கும் ரூ .2 கோடி நிதி உதவியை திரு சுபாஸ்கரன் அறிவித்தார். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நீங்கள் கடிதம் எழுதுவதற்கு முன்பு செய்யப்பட்டவை. ஆனால் பிப்ரவரி 22-ம் தேதிக்கு முன்பு இதெல்லாம் உங்கள் கவனத்திற்கு வரவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானதாக உள்ளது” என்றுக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “இயற்கையின் இந்த சம்பவத்தை கூட்டு பொறுப்பு  மனப்பான்மையுடன் கையாளப்பட வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அனுபவம் வாய்ந்த சிறந்த கலைஞரான நீங்களும், மூத்த இயக்குநர் ஷங்கரும் படபிடிப்பு தளத்தில் ’கேப்டன் ஆஃப் த ஷிப்பாக’ இருந்ததால், பாதுகாப்பு விஷயங்களில் எந்த பிரச்னையும் ஏற்படாது என நாங்கள் இரண்டு மடங்கு நம்பினோம். முழு படப்பிடிப்பும் உங்கள் கட்டுப்பாட்டிலும், ஷங்கரின் கட்டுப்பாட்டிலும் தான் இருந்தது என்பதை நினைவூட்ட கடினமாக உள்ளது.

திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி திடீர் மரணம்

பாதுகாப்பை உறுதி செய்வதில், ‘எந்தக் கல்லையும் விட்டு விடவில்லை’ என்றுக் குறிப்பிட்டுள்ள லைகா, படப்பிடிப்பு தளத்தில் உரிய பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், அனைத்து ஊழியர்கள், கலைஞர்களுக்கும் தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்துள்ளதாகவும் கமலுக்கு எழுதியுள்ள அந்த பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Lyca productions reply for kamal haasan indian about 2 accident

Next Story
”ரிகர்சல்ல கூட கேமராவ ஆபரேட் பண்ணலாம்”: கெளதம் மேனன் பார்வையில் கமல், அஜித், சூர்யா, சிம்புGautham Menon
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express