திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி திடீர் மரணம்

தி.மு.க. ஆட்சி காலத்தில் மீன்வளத்துளை அமைச்சராக இருந்த சாமி, திமுக மீனவரணி செயலாளராகவும் பதவி வகித்தவர்.

By: Updated: February 27, 2020, 01:32:39 PM

DMK MLA K.P.P.Samy Passed Away : சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி (வயது 58) இன்று காலை காலமானார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த எம்.எல்.ஏ சாமியின் உயிர், திருவெற்றியூர் கே.வி.கே குப்பம் அருகே உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை பிரிந்தது.

சேலம் தொகுதி திமுக எம்.பி. வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கு தள்ளுபடி

1962-ம் ஆண்டு சென்னையில் பிறந்த கே.பி.பி சாமி, 2006-ல் திருவொற்றியூர் தொகுதியில் இருந்து திமுக எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்பட்டார். 2006-11 திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த அவர், 2011 தேர்தலில் தோல்வியடைந்தார். 2016 தேர்தலில் மீண்டும் அத்தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது திமுக மீனவரணி செயலாளராகவும் பதவி வகித்தவர். மீனவ சமுதாயத்தை சேர்ந்தவரான கே.பி.பி. சாமி மீனவர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். இவரின் மரணத்தையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கே.பி.பி.சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த விரைந்திருக்கிறார்கள்.

டி.என்.பி.சி.குரூப் 1 தேர்வு முறைகேடு; சிபிஐ விசாரணை கோரி திமுக மனு

“திராவிட இயக்க கொள்கைகளை தன் நெஞ்சில் மீது ஏந்தி எப்போதும் பொதுப்பணியில் ஈடுபட்டு வந்த அவர்- சட்டமன்றத்தில் ஆற்றிய பணிகளும், என்னுடன் இணைந்து பணியாற்றிய காலங்களும் என்றைக்கும் மறக்க இயலாதது.

இடையில் அவர் உடல் நலம் குன்றியிருந்த போது- அவரை நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்திருக்கிறேன். அந்த நேரங்களில் தன் உடல்நலம் பற்றிக்கூட அக்கறை காட்டாமல்- தனது தொகுதி மக்கள் குறித்தும்- குறிப்பாக மீனவர் சமுதாயத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் என்னிடம் பேசுவார். அந்த அளவிற்கு தொகுதி மக்களுக்காகவும், மீனவர் சமுதாயத்திற்காவும் இரவு பகலாக பணியாற்றும் ஒரு செயல் வீரரை இந்த தொகுதி மக்கள் இழந்து வாடுகிறார்கள்” கே.பி.பி.சாமிக்கு எழுதிய இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதன் மூலம் சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 100-லிருந்து 99-ஆக குறைந்திருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”   

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tiruvottiyur dmk mla k p p samy passed away

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X