Maari 2 Full Movie Leaked in Tamilrockers: மாரி 2 படத்தையும் ரிலீஸான சில மணி நேரத்தில் ஆன் லைனில் வெளியிட்டு திரையுலகுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். சூப்பர் ஸ்டாரையும் தமிழ் ராக்கர்ஸ் விட்டு வைப்பதில்லை. சூப்பர் ஸ்டாரின் மருமகனையும் விட்டு வைப்பதில்லை. தினம் தினம் புதுபுதுப் படமாக ரிலீஸ் செய்து கொண்டாடிக் குளிக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.
Kanaa in Tamilrockers: ‘கனா’ படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்
தமிழ் ராக்கர்ஸ் என்கிற ஒற்றைச் சொல்தான் தமிழ் சினிமாவின் ஆகப் பெரிய வில்லன். அண்மையில் படு நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வெளியான 2.0 படத்தையே ஆன் லைனில் அதே தரத்துடன் வெளியிட்டு அதிர வைத்தது தமிழ் ராக்கர்ஸ்.
Maari 2 Movie in TamilRockers: மாரி 2 குழுவினரை அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்
Dhanush Starrer Maari 2 Full Movie in TamilRockers: மாரி 2 குழுவினரை அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்
விஜய் நடிப்பில் வந்த சர்கார், விக்ரமின் சாமி 2, சிவகார்த்திகேயனின் சீமராஜா என எந்தப் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் விட்டு வைக்கவில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 20-ம் தேதி வெளியான சீதக்காதி படத்தையும் அடுத்த சில மணி நேரங்களில் ஆன் லைனில் வெளியிட்டது தமிழ் ராக்கஸ்.
Maari 2 Box Office Collection: மாரி 2 வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா?
Read More: Seethakaathi in Tamilrockers: சீதக்காதி படத்தையும் சூறையாடிய தமிழ்ராக்கர்ஸ்
இந்தச் சூழலில் இன்று (டிசம்பர் 21) நடிகர் தனுஷ்-சாய் பல்லவி நடிப்பில் மாரி 2 ரிலீஸ் ஆனது. தனுஷ் ரசிகர்கள் இந்தப் படத்தை ஆஹா... ஓஹோ.. என கொண்டாடி வருகிறார்கள். ஆனால் படம் ரிலீஸாகி சில மணி நேரத்தில் இந்தப் படத்தையும் ஆன் லைனில் பந்தி வைத்துவிட்டது தமிழ் ராக்கர்ஸ்.
Read More: Maari 2 : தனுஷின் மாரி 2 படத்துக்கு ஆதரவாக நீதிமன்றம் அறிவித்த உத்தரவு
எந்தப் படமும் ரிலீஸாகி ஒரு வாரத்திற்குள் வசூல் ஆவதைப் பொறுத்தே படத்தின் வெற்றி நிர்ணயிக்கப்படும். ஆனால் படம் ரிலீஸான அன்றே திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாவதால் படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More: Maari 2 vs TamilRockers: மிஸ்டர் விஷால்... கொஞ்சம் இதை கவனியுங்க!
இன்று வெளியான கனா, அடங்க மறு உள்ளிட்ட படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுவிட்டதாக தகவல்கள் வருகின்றன. என்ன செய்யப் போகிறது சினிமா உலகம்?