scorecardresearch

Mafia Review : அந்த க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் வேற லெவல்!

குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம் என பல ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார் அருண் விஜய்.

Mafia controversial, toronto serial killer victim
Mafia Review Rating, Arun Vijay

Arun Vijay – Prasanna : ’துருவங்கள் 16’ படத்திற்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன், ‘நரகாசூரன்’ படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த கவுதம் வாசுதேவ் மேனன் படத்திலிருந்து விலகினார். பின்னர் சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் திரைக்கு வரவில்லை.

இதற்கிடையே அருண் விஜய்யை நாயகனாக வைத்து ’மாஃபியா’ படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன். த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளனர். குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம் என பல ஹிட் படங்களைக் கொடுத்த அருண் விஜய், ‘மாஃபியா’விலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பார் என்று தெரிகிறது. படத்தின் டீசர், ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ‘மாஃபியா’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது.

பா.ரஞ்சித் படத்திற்காக இரவு பகல் பாராமல் ஜிம்மில் உழைத்த ஆர்யா – வீடியோ

Live Blog

Mafia Review Rating Updates

மாஃபியா திரைப்படத்தின் விமர்சனம் மற்றும் ரிலீஸ் குறித்த செய்திகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
Highlights

  17:03 (IST)21 Feb 2020
  டாப் கியரில் பயணிக்கிறது

  மெதுவாக ஆரம்பித்து பின்னர் டாப் கியரில் போகிறது என இவர் ட்வீட் செய்துள்ளார்

  16:17 (IST)21 Feb 2020
  நல்ல திரைக்கதை

  நல்ல திரைக்கதை, இரண்டாவது பாதி த்ரில்லிங்காக இருக்கிறது என இவர் ட்வீட் செய்துள்ளார். 

  15:38 (IST)21 Feb 2020
  பெர்ஃபெக்ட் ஆக்‌ஷன் சீக்வென்ஸ்

  ஆக்‌ஷன் சீக்வென்ஸ்கள் பெர்ஃபெக்டாக இருப்பதாக இவர் குறிப்பிட்டுள்ளார். 

  14:56 (IST)21 Feb 2020
  சிங்கம் – நரி கதை

  சிங்கத்துக்கும் நரிக்குமான கதை என இவர் குறிப்பிட்டுள்ளார்

  14:00 (IST)21 Feb 2020
  இரண்டாவது சாப்டருக்கு வெயிட்டிங்

  மாஃபியா படம் நன்றாக இருப்பதாகவும், இரண்டாவது அத்தியாயத்திற்கு காத்துக் கொண்டிருப்பதாகவும் இவர் தெரிவித்துள்ளார். 

  13:04 (IST)21 Feb 2020
  அஜித்துக்கு வில்லனாக பிரசன்னா

  பிரசன்னாவின் வில்லத் தனமான நடிப்பைப் பார்த்த பிறகு, அஜித்துக்கு வில்லனாக, யுவனின் மியூஸிக்கோடு பார்க்கத் தோன்றுகிறது என இவர் ட்வீட்டியுள்ளார். 

  12:44 (IST)21 Feb 2020
  கார்த்திக் நரேனை என்னால் நம்ப முடியவில்லை – பிரசன்னா

  ”துருவங்கள் பதினாரு படத்தைப் பார்த்த பிறகு, நான் கார்த்திக் நரேனுக்கு ஃபோன் செய்து, நாம் ஒருநாள் ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என்று சொன்னேன். ஏனென்றால், யாரிடமும் உதவியாளராக இல்லாத ஒருவரிடமிருந்து இப்படியான படம் வந்ததை என்னால் நம்ப முடியவில்லை. தற்போது மாஃபியாவில் நடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் பிரசன்னா. 

  12:13 (IST)21 Feb 2020
  கடந்த ஐந்து ஆண்டுகள் அருமையாக இருந்தது – அருண் விஜய்

  ”ஒரு நடிகராக இந்த கால கட்டத்தை முழுமையாக அனுபவிக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகள் அருமையாக இருந்தது. என்னை அறிந்தால், குற்றம் 23, செக்க சிவந்த வானம் மற்றும் தடம் ஆகியவற்றின் வெற்றி எனது படங்களை மிகவும் கவனமாக கையாளும் பொறுப்பை எனக்குக் கொடுத்தது” என நடிகர் அருண் விஜய் தெரிவித்தார். 

  11:45 (IST)21 Feb 2020
  கார்த்திக் நரேன் உருக்கம்

  ”நரகசூரனின் நினைவுகளிலிருந்து என்னை மீட்டெடுப்பது வேதனையாக இருந்தது.  நல்ல ஆதரவு  இருந்ததால் என்னால் அதிலிருந்து வெளியேற முடிந்தது. எனது பெற்றோர் மற்றும் எனது உதவி இயக்குநர்களுக்கு நன்றி. முரண்பட்ட சித்தாந்தங்கள் மற்றும் எண்ணங்களைக் கொண்ட இரண்டு நபர்களுக்கு இடையிலான மோதலை தான் மாஃபியா விவாதிக்கிறது” என பிரஸ்மீட்டில் கூறினார் மாஃபியா இயக்குநர் கார்த்திக் நரேன்

  11:23 (IST)21 Feb 2020
  வேற லெவல் கிளைமேக்ஸ் ட்விஸ்ட்

  மாஃபியா படத்திற்கு திரையரங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும், கிளைமேக்ஸ் ட்விஸ்ட் அட்டகாசமாக இருந்ததாகவும் இவர் குறிப்பிட்டிருக்கிறார். 

  10:51 (IST)21 Feb 2020
  கார்த்திக் ஸ்ரீனிவாசன் வாழ்த்து

  செலிபிரட்டி ஃபோட்டோகிராஃபர் கார்த்திக் ஸ்ரீனிவாசன், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

  10:45 (IST)21 Feb 2020
  அந்த நாள் வந்து விட்டது

  அந்த நாள் வந்து விட்டது. இன்று முதல் திரையரங்குகளில் மாஃபியா என ட்வீட் செய்திருக்கிறார் படத்தின் நாயகன் அருண் விஜய் 

  Mafia Review :தொடர் தோல்விகளால் துவண்டு போன, நடிகர் அருண் விஜய், ஒரு கட்டத்தில், சினிமாவை விட்டே விலகி விடலாம் என எண்ணி விட்டாராம். அதன் பிறகு, நடிகர் விஜய் சொன்ன அட்வைஸால் தான் மீண்டும் சினிமாவுக்கு திரும்பி, நல்ல கதைகளை கேட்க ஆரம்பித்தேன் என சமீபத்தில், ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதனால் விஜய் ரசிகர்களின் ஆதரவும் அருண் விஜய்க்கு கிடைத்தது. தவிர அஜித்துடன் இணைந்து ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்ததால், அஜித் ரசிகர்களின் சப்போர்ட்டும் அருணுக்கு இருக்கிறது.

  Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

  Web Title: Mafia review rating release live updates arun vijay priya bhavani shankar prasanna