Arya’s next with P.Ranjith : இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார் நடிகர் ஆர்யா. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, வெகு தீவிரமாக உடற்பயிற்சி செய்து, தனது உடலை கட்டு கட்டாக மாற்றியிருக்கிறார். ஆகையால் ரஞ்சித்தின் படத்தில் வட சென்னையைச் சேர்ந்த பாக்ஸராக ஆர்யா நடிப்பார் என்று தெரிகிறது.
நடிகர் தனுஷ்க்கு தலை இருக்காது – கொலைமிரட்டலால் பரபரப்பு
அதோடு தனது ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்டு, “ரஞ்சித் சாரின் படத்திற்கு தயாராகி விட்டேன். விளையாட்டு மீதான என் காதல் உயிர் பெற்று திரையில் வரவிருக்கிறது. ரஞ்சித் சாரின் அடுத்தப் படத்தில் பாக்ஸர்களை எதிர் கொள்கிறேன். இந்தப் படம் எனது திரை வாழ்க்கையில் மிகவும் சவாலானது. அனுபவத்தை நேசிக்கிறேன். ரஞ்சித் சார் தனித்துவமானவர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
My love for sports coming alive on screen
All set to face the boxers in the ring with @beemji sir for our next ???? It’s the most challenging film of my career. Loving the experience. #Ranjith sir is just phenomenal ???????????? @Music_Santhosh @K9Studioz #AnbuArivu #Murali pic.twitter.com/1ejKMipNYh— Arya (@arya_offl) February 20, 2020
படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன், ஸ்டண்ட் இயக்குநராக அன்பு அறிவு பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்திற்கு ’சல்பேட்டா பரம்பரை’ என்று பெயரிடப்பட்டதாக தகவல் வெளியானது. இருப்பினும் இந்த டைட்டில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மகா சிவராத்திரி : ஈஷா மையத்திற்கு வருகை புரிகிறார் குடியரசு துணைத் தலைவர்!
இந்தத் திரைப்படம் ஆர்யாவின் 30-வது படமாக இருக்கும். காப்பான் மற்றும் மாகமுனி வெளியான பிறகு, மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார் ஆர்யா. ரஞ்சித்திற்கு 2018-ல் ‘காலா’ வெளியானது. இந்நிலையில் அவரது அடுத்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தவிர, ’டெடி’ படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா. அதில் அவரது மனைவி சாயிஷா, ஹீரோயினாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:P ranjith movie arya work out video
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்