master cartoon, vijay, malavika mohanan, malavika mohanan cartoon, malavika cartoon, master movie cartoon, malavika twitter, malavika mohanan twitter, மாளவிகா மோகனன், மாஸ்டர், விஜய், விஜய் ரசிகர்கள், சினிமா செய்திகள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இத்திரைப்படம் இம்மாதம் ரிலீஸ் ஆகவிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக நாடே ஊரடங்கில் முடங்கிக் கிடக்க, எப்போது படம் ரிலீஸாகும் என்று குறைந்தது ஆறு மாத காலத்திற்கு எவரும் கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
Advertisment
மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனனுக்கு ஹீரோயினாக இதுவே முதல் படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார். மாளவிகா எப்போதும் சமூக வலைத்தளங்களால் அதிகம் ஆக்டிவாக இருப்பவர்.
Advertisment
Advertisements
அடிக்கடி தனது போட்டோஷூட் புகைப்படங்களை அவர் வெளியிடுவதும், அதை விஜய் ரசிகர்கள் வைரலாக்குவதும் வாடிக்கையாகும்.
இந்நிலையில் மாஸ்டர் படக்குழு தற்போது கொரோனா லாக்டவுனில் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கற்பனையில் விஜய் ரசிகர் ஒருவர் கார்ட்டூன் வெளியிட்டுள்ளார். அது மாளவிகாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த புகைப்படத்தில் மாளவிகா சமைத்துக்கொண்டிருப்பது போல இருப்பது தான் அவரது கோபத்திற்கு காரணம்.
இதற்கு பதிலளித்துள்ள மாளவிகா, "இந்த ஒரு கற்பனையான படத்தின் வீட்டில் கூட பெண்கள் சமைக்கும் வேலை தான் செய்ய வேண்டுமா? இந்த பாலின பாத்திரங்கள் எப்போது சாகும்? ச்சை" என்று ட்வீட் செய்தார்.
ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த ட்வீட்டை மாளவிகா நீக்கிவிட்டார். அதை ஏன் நீக்கினார் அவர் என காரணம் தெரியவில்லை.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பாடகி சின்மயி, "ஆயிரக்கணக்கானவர்களிடம் இருந்து வரும் வெறுப்பை பலராலும் சமாளிக்க முடியாது. இதற்காக அவர்களை குறை சொல்ல முடியாது" என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”