அப்போ ’மேக்கரீனா’, இப்போ ’வாத்தி கம்மிங்’ : தளபதி பாடலுக்கு ஷில்பா ஷெட்டி நடனம்

Thalapathy Vijay: ‘மாஸ்டர்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் யூ-டியூப், டிக் டாக் என சமூக வலைதளங்கள் அனைத்திலுமே பல சாதனைகளை படைத்து வருகிறது.

Shilpa Shetty Vaathi Coming tik tok video, thalapathy vijay, master movie
Shilpa Shetty Vaathi Coming tik tok video, thalapathy vijay, master movie

Shilpa Shetty dance for Vaathi Coming : நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள, மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் படம் வெளியாகவில்லை. இதற்கிடையே இன்ஸ்டாகிராமில் லைவில் உரையாடிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கிட்டத் தட்ட 30 நாட்கள் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மீதமிருக்கின்றன எனத் தெரிவித்திருக்கிறார். ஆகையால் வைரஸ் பிரச்னை சரியானதும் படத்தின் பின் தயாரிப்பு வேலைகள் ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது.

சன் டிவி ’சந்திர லேகா’ சீரியல்: நம்ம சந்திராவா இது?

இந்நிலையில், ‘மாஸ்டர்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் யூ-டியூப், டிக் டாக் என சமூக வலைதளங்கள் அனைத்திலுமே பல சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங், வாத்தி ரெய்டு ஆகிய பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தப் பாடல்களை வைத்து பலரும் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். மேலும் டிக்டாக் செயலியில் மட்டும் மாஸ்டர் பாடல்கள் வீடியோக்கள் 1,500 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகின்றன.

இதற்கிடையே தற்போது ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி டிக்டாக் செய்து வெளியிட்டுள்ள வீடியோவும் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். தவிர 20 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2000-ம் ஆண்டில் விஜய் நடித்து பெரும் வெற்றியடைந்த படம் ‘குஷி’. அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘மேக் மேக் மேக் மேக்கரீனா’ என்ற பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து, ஷில்பா ஷெட்டி நடனமாடியிருந்தார். தற்போது விஜய் பாடலுக்கு டிக் டாக் செய்து வெளியிட்டுள்ளார்.

ஆந்திரா ராஜ்பவன் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா; ஆளுநருக்கு விரைவில் பரிசோதனை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Shilpa shetty tik tok video on thalapathy vijays vaathi coming song

Next Story
”என்றும் ரோஸ்” – தன்னுடைய இந்தியா பயணம் குறித்து பேசிய டைட்டானிக் நடிகை'Titanic' star Kate Winslet talks about her backpack trip to India
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express