பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில், ஆந்தாலஜி வகைப் படங்கள் அதிகம். வெவ்வேறு கதைகளின் தொகுப்பாக இவ்வகைப் படங்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. இதனை வெவ்வேறு இயக்குநர்கள் இயக்குவார்கள். தமிழில் கூட இந்த வகையில் ‘சில்லுக்கருப்பட்டி’ என்ற படம் வெளியானது. ஆனால் இதனை இயக்குநர் ஹலீதா ஷமீம் மட்டுமே இயக்கியிருந்தார்.
இரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்?
இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் நெட்ஃப்ளிக்ஸ் என்ற ஓடிடி தளத்துக்காக ஆந்தாலஜி படம் ஒன்றை தயாரிக்கிறார். ‘நவரசா’ என்ற அந்த படத்தை ஜெயேந்திராவுடன் இணைந்து அவர் தயாரித்து வருகிறார். நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி படத்தை இயக்குநர்கள் கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன்ராம், கவுதம் மேனன், ரதீந்திரன் பிரசாத், ஹலீதா ஷமீம், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குநர்கள் இயக்குகிறார்கள். இதன் மூலம் நடிகர் அரவிந்த்சாமி இயக்குநராக அறிமுகமாகிறார்.
நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ், சரவணன், அழகம் பெருமாள், பிரசன்னா, விக்ராந்த், கவுதம் கார்த்திக், அசோக் செல்வன், ரோபோ சங்கர், ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கிறார்கள். நடிகைகள் ரேவதி, நித்யா மேனன், பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், பூர்ணா, ரித்விகா ஆகியோரும் நடித்துள்ளனர்.
சந்தோஷ் சிவன், பாலசுப்பிரமணியம், மனோஜ் பரமஹம்சா, ஹர்ஷ்வீர் ஓபராய், சுஜித் சராங், வி.பாபு, விராஜ் சிங், அபிநந்தன், ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஆகியோர் ஒளிப்பதிவாளராக பணிபுரிகின்றனர். ஏ.ஆ.ரஹ்மான், டி இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக், ரோன் எத்தன் யோஹான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோர் இசையமைக்க உள்ளனர்.
’ஷிவானி ஓகே ஆகிருச்சா?’ வெட்கத்தில் பாலா
எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர், செல்வா, மதன் கார்க்கி, சோமிதரன் ஆகியோர் இந்த ஆந்தாலஜி படத்தில் பணியாற்றியுள்ளனர். கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த ஆந்தாலஜி படம் உருவாகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”