மாஸ்டர் முழுப் படமும் லீக்… மறுபடியும் ‘பெப்பே’ காட்டிய தமிழ் ராக்கர்ஸ்

Master Tamil Movie: முழுப் படத்தையும் காப்பாற்றுவது, கோழிக் குஞ்சுகளை பருந்திடம் இருந்து பாதுகாப்பது போன்ற கடினமான பணியே!

Master full Movie Download Banned: மாஸ்டர் படத்தை பைரசி வெப்சைட்கள் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. எப்போதுமே நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் தங்கள் கடமையை செய்கின்றன. அதை முழுமையாக அமல்படுத்தும் வாய்ப்பு அதிகாரிகளுக்கு இருக்கிறதா? தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களை தடுக்க முடிகிறதா? என்பவை கேள்விகளாகவே நிற்கின்றன. இதற்கிடையே மாஸ்டர் படம் புதன்கிழமை மதியத்திற்கு முன்பே முழுமையாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சில பைரசி வெப்சைட்களில் வெளியானது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ‘மாஸ்டர்’ படம் தயாரானது. இந்தப் படம் பொங்கலையொட்டி ஜனவரி 13-ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. பொதுவாக பெரிய நடிகர்களின் படத்தை ரிலீஸான சில மணி நேரங்களில் திருட்டுத்தனமாக வெளியிடுவதை பைரசி வெப்சைட்கள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன.

Master Tamil Movie vs Tamilrockers: தமிழ்ராக்கர்ஸ் அடங்குமா?

‘மாஸ்டர்’ படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். எனவே ‘மாஸ்டர்’ படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரி ‘மாஸ்டர்’ பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான செவன் க்ரீன் ஸ்டூடியோவின் லலித்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 400 இணையதளங்கள் மற்றும் 9 கேபிள் டி.வி.க்களில் ‘மாஸ்டர்’ படத்தை சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். திரையுலகம் மகிழத்தக்க உத்தரவு இது. எனினும் இது போன்ற உத்தரவுகளை நடைமுறையில் அமுல்படுத்த அதிகாரிகளால் முடிகிறதா? என்பதுதான் கேள்வியாக நிற்கிறது.

மாஸ்டர் முழுப் படத்தையும் ‘லீக்’ செய்த பைரசி வெப்சைட்கள்

தமிழ் ராக்கர்ஸ் போன்ற வெப்சைட்கள் ஒவ்வொரு முறையும் படம் ரிலீஸான சில மணி நேரங்களில் அந்தப் படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டு விடுகின்றன. இந்த இணையதளங்களின் முகவரிகளை முடக்கினால், உடனே முகவரியை மாற்றிக்கொண்டு வேறு முகவரியில் இயங்குகின்றன. இந்த வெப்சைட்களின் லிங்க்களை டெலகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவச் செய்து வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கச் செய்கிறார்கள்.

தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களைத் தடுக்க முயற்சிகள் நடந்தபோதும், அதற்கு இதுவரை பலன் இல்லை. மாஸ்டர் பட விஷயத்தில் சில காட்சிகள் ரிலீஸுக்கு 2 நாட்கள் முன்பே இணையத்தில் வந்துவிட்டன. முழுப் படத்தையும் இந்த பைரசி வெப்சைட்களிடம் இருந்து காப்பாற்றுவது, கோழிக் குஞ்சுகளை பருந்திடம் இருந்து பாதுகாப்பது போன்ற கடினமான பணியே!

Latest: மாஸ்டர் படம் புதன்கிழமை மதியத்திற்கு முன்பே முழுமையாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சில பைரசி வெப்சைட்களில் வெளியானது. டெலகிராம் உள்ளிட்ட சில சமூக ஊடகங்களில் இந்த பைரசி வெப்சைட்களின் லிங்க்கள் பகிரப்பட்டன. இந்த லிங்க்களுக்கான இணையத்தில் முட்டி மோதிய பார்வையாளர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Master full movie download tamilrockers chennai high court banned

Next Story
ஆன்லைனில் ‘மாஸ்டர்’ லீக்… கூகுளில் இதுதான் ட்ரெண்ட்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X