‘எமனுக்கும் சாவுண்டு இவன் மொறச்சா’: ’மாஸ்டர்’ புது லிரிக் வீடியோ

இந்த நேரத்தில் எந்த முன்னறிவிப்புமின்றி சர்ப்ரைஸ் கொடுத்த மாஸ்டர் டீமை பாராட்டி வருகிறார்கள் ரசிகர்கள்.

By: Updated: April 2, 2020, 12:46:19 PM

Polakattum Para Para : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த பாடத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாகவும், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்கள்.

1 வயதைக் கடந்த பிரஜின் சாண்ட்ராவின் ட்வின்ஸ்: முதன்முறை வெளியான படம்

இவர்களுடன் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், கௌரி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை அனிருத். படத்தில் கல்லூரிப் பேராசிரியராக நடித்துள்ளார் விஜய். இந்த வருட காதலர் தினத்தன்று மாஸ்டர் படத்தில் இடம்பெற்றிருக்கும் ’குட்டி ஸ்டோரி’ என்ற பாடல் வெளியானது. இதனை பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ் எழுதி, விஜய் பாடியிருந்தார். முழுக்க முழுக்க மோட்டிவேஷனலாக உருவாகியிருக்கும் இந்தப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனைத்தொடர்ந்து கடந்த 15-ஆம் தேதி மாஸ்டர் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகின. பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அனிருத்,  இன்னும் இரண்டு பாடல்கள் மீதம் இருப்பதாகவும், அவற்றை விரைவில் வெளியிடுவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ’பொளக்கட்டும் பற பற’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய்க்கு சமமாக விஜய்சேதுபதிக்கும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதால் அவருக்கான பாடல்தான் இது. இதனை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். இந்த நேரத்தில் எந்த முன்னறிவிப்புமின்றி சர்ப்ரைஸ் கொடுத்த மாஸ்டர் டீமை பாராட்டி வருகிறார்கள் ரசிகர்கள்.

கேன்சல் டிக்கெட்டிற்கு முழுத்தொகையை திருப்பியளிக்கிறது ரயில்வே – இதோ வழிமுறை

இதற்கிடையே மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தாக்கத்தால், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், இந்தப் பிரச்னை முடிந்ததும் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Master polakattum para para lyric video vijay sethupathi thalapathy vijay

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X