விஜய் வீட்ல விஷேசம்… 2500 பேருக்கு திருமண விருந்து: ‘மாஸ்டர்’ பிளான் என்ன?

ஆகாஷ் - சிநேகா திருமணத்தில் விஜய் உள்ளிட்ட முக்கியக் குடும்ப உறுப்பினர்கள் கலந்துக் கொள்கிறார்கள்.

By: August 24, 2020, 9:57:00 AM

நடிகர் விஜய் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சிநேகா பிரிட்டோவிற்கும், மறைந்த நடிகர் முரளியின் இளையமகன் ஆகாஷுக்கும் சென்னையில் இன்று திருமணம் நடைபெறுகிறது.

இந்த 5-ல் ஒரு போன் உங்ககிட்ட இருந்தாப் போதும்… அவசரத்திற்கு டாக்டர் தேவையில்லை

ஆகாஷும், சிநேகாவும் சிங்கப்பூரில் ஒரே கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அங்கு நட்பு காதலாகி தற்போது இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் நடைபெறுகிறது. இவர்களுக்கு கடந்த 2019 டிசம்பர் 6-ம் தேதி சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.அப்போது 2020 ஏப்ரல் மாதத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்திருந்தார்கள். ஆனால் தேதியை முடிவு செய்வதற்குள் கொரோனா வந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விட்டதால், திருமணம் தள்ளிப்போனது.

இந்நிலையில் ஆகாஷ் – சிநேகா பிரிட்டோ திருமண நிகழ்வுக்கு நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே திருமண நிகழ்வில் கலந்துக் கொள்வார்கள் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு நண்பர்கள், உறவினர்கள் சினிமாத்துறையினர் அனைவருக்குமே பிரிட்டோ மற்றும் முரளி குடும்பத்தின் சார்பாக கடந்தவாரம் மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ”கடவுள் மற்றும் எங்களது பெற்றோரின் ஆசியுடன் ஆகாஷ்- சினேகா திருமணம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெறுகிறது. கோவிட்-19 சூழல் காரணமாக எல்லோருடைய பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்தத் திருமணத்தை இரண்டு தரப்பு குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் மட்டுமே நடத்துவது என முடிவு செய்திருக்கிறோம். நீங்கள் அனைவரும் நேரில் வந்து வாழ்த்தக்கூடிய சூழல் இப்போதில்லை என்பது வருத்தமாகவே இருக்கிறது. ஆனால், உங்களின் ஆசிர்வாதம் இந்த இளம் தம்பதியினருக்கு நிச்சயம் கிடைக்கும். இந்தக் கொரோனா சூழல் சரியானதுமே நடைபெற இருக்கும் ஆகாஷ்-சிநேகா திருமண வரவேற்பில் உங்கள் அனைவரையும் சந்திப்போம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சமூக தளங்களில் வைரலாகும் இன்பநிதி! – உற்சாகமான திமுக யங் ஆர்மி!

இன்று நடக்கும் ஆகாஷ் – சிநேகா திருமணத்தில் விஜய் உள்ளிட்ட முக்கியக் குடும்ப உறுப்பினர்கள் கலந்துக் கொள்கிறார்கள். அதோடு சென்னையில் இருக்கும் 2500 ஆதரவற்றவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Master producer daughter sneha britto akash murali wedding thalapathy vijay

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X