Advertisment

அப்போ மாஸ்டர் ஆடியோ லான்ச்-க்கு ரசிகர்கள் திரள முடியாதா? திகிலில் தளபதி ஃபேன்ஸ்

Master audio launch News: முதலில், புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் நடத்தலாம் என்ற முயன்ற போது அனுமதி கிடைக்கவில்லையாம். பிறகே, லீலா பேலஸில் ஏற்பாடு செய்திருப்பதாக ஒரு தகவல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அப்போ மாஸ்டர் ஆடியோ லான்ச்-க்கு ரசிகர்கள் திரள முடியாதா? திகிலில் தளபதி ஃபேன்ஸ்

vijay, master audio launch, master movie audio launh date announced, விஜய், மாஸ்டர் இசை வெளீட்டு விழா, மாஸ்டர் இசை வெளியீட்டு விழா

Master Movie audio launch News: மாஸ்டர் திரைப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கும் இந்த படத்திற்கு  அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைத்திருக்கிறார்.  படம் ஏப்ரல் மாதம் 9ம் தேதியன்று உலகளவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 15-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிகில் பட இசை வெளியீட்டு விழா போல் அல்லாமல் மிகவும் எளிமையாக இந்த விழாவினை ஏற்பாடு செய்துள்ளனர். படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுனர்கள், சினிமா நட்சத்திரங்கள், கலைஞர்கள்  போன்றவர்கள் மட்டும் தான் அழைக்கப்படுகின்றனர்.

ரசிகர்கள் திரள முடியாதா ? 

‘பிகில்’ பட ஆடியோ லாஞ்ச் விழா சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சுமார் 4 ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய விஜய், தனது பொதுவான அமைதியை கலைந்து சினிமா அல்லாத விஷயங்களை குறித்தும் பேசினார். குறிப்பாக சுபஸ்ரீ விவகாரத்தில் ட்விட்டரில் ஒரு ஹேஷ்டேக் கொண்டு வந்திருந்தா நல்லா இருந்திருக்கும் என்றார் . யார் மீது பழிபோடுறதுன்னு தெரியாம லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடிச்சவங்க மேலயும் பழிபோடுறாங்க. யாரை எங்க உட்கார வைக்கணுமோ, அவங்களை அங்க உட்கார வச்சா நல்லா இருக்கும்” என்ற கருத்தையும் பதிவு செய்தார்.

பிகில் ஆடியோ லாஞ்ச் சர்ச்சை: விளக்கம் கொடுத்த விவேக்!

முந்தைய சர்கார் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்வும் ஒரு பொது விழாவாக நடத்தப்பட்டது. நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் குறைந்தது 10 ஆயிரம் ரசிகர்க்குள் கலந்து கொண்டனர்.

ரஜினிகாந்தின் ஏமாற்றம் என்ன தெரியுமா? தமிழருவி விளக்கம்

மாஸ்டர் படப்பிடிப்பின் போது வருமானவரித்துறை சோதனை, அங்கே பாஜகவினர் நடத்திய போராட்டம் போன்றவை குறித்து இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாஸ்டர் இசைவெளியீட்டு விழா குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்க்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரிக்கையில்: 

முதலில் கோவையில் ஆடியோ லான்ச் திட்டமிட்டிருந்த நிலையில், அங்கு எந்த கல்லூரியிலும் அனுமதி கிடைக்கவில்லை. பிறகு, புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் நடத்தலாம் என்ற முயன்ற போதும் அனுமதி கிடைக்கவில்லையாம். இதற்கு பிறகே, லீலா பேலஸில் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் தீவிரமடைந்து உள்ளதாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Actor Vijay Master
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment