கன்னட சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை மேக்னா ராஜ், தமிழ் படங்களான 'காதல் சொல்ல வந்தேன்', 'உயர் திரு 420' ஆகியப் படங்களில் நடித்துள்ளார். அதோடு பல மலையாள மற்றும் தெலுங்கு படங்களில், சிறந்த நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். ஆக்ஷன் கிங் அர்ஜூனின் மருமகனும், கன்னட ஹீரோவுமான, சிரஞ்சீவி சர்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து வந்த, மேக்னா ராஜ் 2018-ல் திருமணம் செய்துக் கொண்டார்.
5 இயக்குநர்கள் பல முன்னணி நடிகர்கள்: கிளாஸியான புத்தம் புது காலை ட்ரைலர்!
துரதிர்ஷ்டவசமாக, 2020 ஜூன் 7 ஆம் தேதி, மேக்னா நான்கு மாத கர்ப்பமாக இருந்தபோது, சிரஞ்சீவி சர்ஜா திடீரென காலமானார். இதற்கிடையே சமீபத்தில் கன்னட ஊடகங்களில் இரட்டையர்களை மேக்னா பெற்றெடுத்ததாக வதந்திகள் பரவின. அதோடு அவரும் அவரது குடும்பத்தினரும் குழந்தைகளை வைத்திருக்கும் போலி புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டன.
,
சமூக ஊடகங்களில் எழுதும் இதுபோன்ற அறிக்கைகளைக் கண்டு வெகுண்டெழுந்த மேக்னா, ”அனைவருக்கும் வணக்கம்... நான் விஷயங்களைப் பற்றி பேசி சிறிது காலம் ஆகிவிட்டது.. நான் மிக விரைவில் வருவேன். அதுவரை எனது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களை எந்த வீடியோக்களுக்கும் செவிசாய்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னைப் பற்றியோ அல்லது எனது குடும்ப உறுப்பினர்களைப் பற்றியோ எந்த விஷயமானாலும், உங்களுக்கு என்னால் நேரடியாக தெரிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
,
அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கும் மேக்னா, பெங்களூருவில் தனது வீட்டில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். அந்த விழாவில், மேக்னாவின் மறைந்த கணவரின் கட் அவுட்டும் வைக்கப்பட்டுள்ளது.
அந்த விழாவில், சிரஞ்சீவியின் தம்பி துருவ் சர்ஜா மற்றும் அவரது மனைவி ப்ரேரானா சங்கர் மற்றும் அவரது பெற்றோர்களும் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் கலந்துக் கொண்டனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”