Advertisment

கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா: பெண் தொழில்முனைவோருக்குப் பிடிக்கும்!

வழக்கத்தை விட மிஸ் இந்தியா படத்தில் ரொம்ப ஒல்லியாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

author-image
WebDesk
New Update
Keerthy Suresh in Miss India Movie

மிஸ் இந்தியா

Miss India Movie: இயக்குநர் நரேந்திர நாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து, ஓடிடி-யில் வெளியான படம் ‘மிஸ் இந்தியா’. ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவானது. ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மிஸ் இந்தியா படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜெகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ், நதியா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

Advertisment

என்ன எல்லார் பேரையும் சொல்லிட்டீங்க பிக் பாஸ்?!

இறுதியாக கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்த நிலையில் ‘மிஸ் இந்தியா’ திரைப்படமும் நவம்பர் 4-ம் தேதி நெட் ஃப்ளிக்ஸில் வெளியானது. சிறு வயதில் இருந்தே சொந்த தொழில் தொடங்க வெற்றி பெறுவதையே லட்சியமாக கொண்டவர் கீர்த்தி சுரேஷ். அவரது லட்சியத்துக்கு வீட்டில் தடை போடப்படுகிறது. படித்து முடித்த பின்னர் தடைகளை கடந்து சொந்தமாக மிஸ் இந்தியா என்ற பெயரில் டீ, தொழில் தொடங்குகிறார். அதில் காபி பிஸினெஸ் செய்து வரும் போட்டியாளரான ஜெகபதிபாபு மூலம் பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன. அவற்றை எல்லாம் சமாளித்து எப்படி வென்றார் என்பதே கதை.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்படுமா?

வழக்கத்தை விட மிஸ் இந்தியா படத்தில் ரொம்ப ஒல்லியாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். மகாநடி படத்துக்குப் பிறகு, பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் கீர்த்தி நடித்தாலும், அவரது நடிப்புக்கான தீனி இதில் இல்லை என்றே தோன்றுகிறது. தடைகளைத் தாண்டி எப்படி ஜெயித்தார் என்ற கதையில், அனைத்துக் காட்சிகளுமே யூகிக்கக் கூடிய வகையில் இருந்தது மிகப்பெரிய பின்னடைவு. சில காட்சிகள் பெண் தொழில்முனைவோர்களுக்கு பிடிக்கும் விதத்தில் இருக்கிறது. ஆனால் எல்லா தரப்பு ரசிகர்களையும் மிஸ் இந்தியா கவரவில்லை.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Keerthy Suresh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment