‘அமரகாவியம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இன்று நேற்று நாளை திரைப்படம்’ ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.
Tamil News Today Live: சென்னையில் அனைத்து வழித் தடங்களிலும் மெட்ரோ சேவை தொடங்கியது
அதோடு எமன், வெற்றிவேல் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தவிர மலையாள சீரியல்களில் நடித்துள்ள மியா, ரியாலிட்டி ஷோ ஜட்ஜாகவும் இருந்திருக்கிறார். தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார்.
‘அது ஒரு பேரின்ப கனாகாலம்’ நாம் தமிழர் கட்சியிலிருந்து ராஜிவ் காந்தி விலகல்
இந்நிலையில், மியா ஜார்ஜூக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இதனிடையே தற்போது மியா ஜார்ஜின் மணப்பெண் விழா நடந்துள்ளது. இதில் அவரது தோழிகள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர். இணையத்தில் அந்த புகைப்படங்கள் வெளியாகி, வைரலாகி வருகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”