Munthanai Mudichu Remake: இயக்குநர் கே.பாக்யராஜின் முந்தானை முடிச்சு பட ரீமேக்கில் சசிக்குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1983-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி, நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘முந்தானை முடிச்சு’. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் ஊர்வசி, தீபா, கே.கே.செளந்தர், ‘பசி’ சத்யா உள்ளிட்ட பலர் பாக்யராஜுடன் நடித்திருந்தனர்.
விவாகரத்தான விஜய், விக்ரம் ஹீரோயின்: உறுதிப்படுத்திய கணவர்…
தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆனது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 36 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
Excited and honoured to be a part of the remake of #MunthanaiMudichu, one of Tamil cinema’s landmark films that’s stood the test of time. Watch out for this one in 2021! @SasikumarDir @ungalKBhagyaraj @JsbSathish@idiamondbabu #JSBFilmStudio pic.twitter.com/ceO4ZSFzcT
— aishwarya rajessh (@aishu_dil) September 19, 2020
இதற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை பாக்யராஜ் எழுத, அவர் நடித்த கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் படத்தின் இயக்குநர் மற்றும் ஊர்வசி கதாபாத்திரத்தில் யார் என்பதெல்லாம் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது ஊர்வசி கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனாலும் இயக்குநர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. ‘முந்தானை முடிச்சு’ ரீமேக்கை ஜே.எஸ்.பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
’நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன்’: சூர்யா
இது குறித்து, ’முந்தானை முடிச்சு’ படத்தில் இணைந்திருப்பது உற்சாகமாகவும் பெருமையாகவும் இருப்பதாகவும், தமிழ் சினிமாவின் மைல் கல் படத்தில் நடிக்கிறேன், எனவும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.
படம் 2021-ல் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”