’பேபி கம்மிங் சூன்’ மைனா நந்தினியின் ஸ்பெஷல் ஃபோட்டோ!

கடந்த வருடம் சீரியல் நடிகர் யோகேஷ்வரன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

Myna Nandhini Pregnancy Photo
மைனா நந்தினி

Myna Nandini : சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்திருந்த நந்தினி அந்த தொடருக்கு பின்னர், மைனா நந்தினி என அழைக்கப்படுகிறார். காமெடி கலந்த அந்த கதாபாத்திரம், ரசிகர்களிடம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஏராளமான தொடர்களில் நடித்த மைனா நந்தினி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகள்: இளம் வயதில் மறைந்த சோகம்

‘வம்சம்’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘காஞ்சனா 3’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்திலும் நடித்திருந்தார். கடந்த வருடம் சீரியல் நடிகர் யோகேஷ்வரன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். தற்போது சன் டிவியின் ‘நாயகி’ தொடரில் வில்லனாக நடித்து வருகிறார் யோகேஷ்வரன்.

’ஏர்போட்ல ரஜினி கூட அந்த சந்திப்பு…’ ரகசியம் உடைத்த கிரிக்கெட் நட்சத்திரம்

இந்நிலையில் மைனா கர்ப்பமாக இருப்பதை சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். சில தினங்களுக்கு முன்பு, அவருக்கு வளைகாப்பு நடைப்பெற்றது. அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகின.  இந்நிலையில் மைனாவின் கணவர் யோகேஷ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைனா நந்தினியுடன் இருக்கும் ஸ்பெஷல் ஃபோட்டோவை பகிர்ந்து, Baby Coming Soon என்று அறிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Myna nandhini pregnancy special photo nayagi serial yogesh

Next Story
’ஏர்போட்ல ரஜினி கூட அந்த சந்திப்பு…’ ரகசியம் உடைத்த கிரிக்கெட் நட்சத்திரம்superstar rajinikanth, javagal srinath
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com