’ஏர்போட்ல ரஜினி கூட அந்த சந்திப்பு…’ ரகசியம் உடைத்த கிரிக்கெட் நட்சத்திரம்

அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக்கானைத் தவிர, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர் என முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் தெரிவித்தார்.

By: September 2, 2020, 11:02:11 AM

கிரிக்கெட் மற்றும் சினிமா இரண்டுமே இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு விஷயங்கள். இந்த இரு தொழில்களில் இருக்கும் நட்சத்திரங்கள் ரசிகர்களால் அதிகம் நேசிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் உள்ள மற்ற கிரிக்கெட் ரசிகர்களைப் போலவே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இந்த விளையாட்டின் மிகப்பெரிய ரசிகர். அவர் போட்டிகளை ரசிப்பதற்காக அரங்கத்தில் சில முறை காணப்பட்டார்.

தமிழக கோயில்களில் தரிசனம்: பாரம்பரிய உடை, ஆதார் கார்டு அவசியம்

சுவாரஸ்யமாக, ஒரு பெரிய நட்சத்திரமாக இருப்பதால், நடிகர் ரஜினிகாந்தும்,  பல கிரிக்கெட் வீரர்களுக்கும் மிகவும் பிடித்தவர். அவர்களில் ஒருவர் கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத்.

அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக்கானைத் தவிர, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர் என முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் தெரிவித்தார். கிரிக்கெட் வீரர் அஸ்வினுடனான ஒரு சாட்டில், தனது விளையாட்டு நாட்களில் ரஜினிகாந்துடன் நடந்த சந்திப்பு குறித்து நினைவுக்கூர்ந்தார்.

முன்னாள் இந்திய பந்து வீச்சாளர் ஜவகல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் பாராட்டியதோடு, “அவர் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுவருகிறார். அதாவது, நீங்கள் மனச்சோர்வடையும் போது, போய் ரஜினிகாந்த் திரைப்படத்தைப் பாருங்கள். அவரது ஸ்கிரீன் பிரெசன்ஸ் அந்த திரைப்படத்துக்கு கூடுதல் ஈர்ப்பை உண்டாக்கும். இது உண்மையிலேயே என்னை நேசிக்க வைக்கிறது” என்றார்.

30 நாள் இலவச ஜியோ நெட்வொர்க்: செம்ம ஆஃபர்களுடன் ரூ399 முதல் புதிய ப்ளான்கள்!

சூப்பர் ஸ்டாருடனான சந்திப்பு குறித்து பேசிய ஸ்ரீநாத், “நான் அவரை இரண்டு முறை சந்தித்தேன். ஒரு முறை நான் அவரை விமான நிலையத்தில் சந்தித்தேன், அவர் என்னை வீட்டில் இறக்கிவிட முன் வந்தார். பெங்களூர் விமான நிலையத்தில் அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. உங்களுக்கு ஒரு டல்லான நாளின் போது அல்லது சோர்வாக இருக்கும் போது ஒரு ரஜினிகாந்த் திரைப்படத்தைப் பாருங்கள். நீங்கள் முழுதாக சார்ஜ் செய்யப்பட்டு வெளியே வருவீர்கள்” என்று ஸ்ரீநாத் கூறினார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Superstar rajinikanths fan cricketer javagal srinath

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X