Naam Iruvar Namakku Iruvar: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ். தனது வளர்ப்பு அம்மாவுக்கு தாமரையைப் பிடிக்காத காரணத்தால், அவளை விவாகரத்து செய்து விடுகிறான் டாக்டர் அரவிந்த். அரவிந்த், மாயன் இருவரும் இரட்டையர்கள், மாயனின் மனைவி தேவியின் அப்பாவும், அரவிந்தின் மனைவி தாமரையின் அப்பாவும் ஒருவர்தான். அம்மாதான் வேறு வேறு. தாமரையை அரவிந்த் விவாகரத்து செய்தது, மாயனின் மனைவியான தேவியால் தாங்கிக்க முடியலை.
அருந்ததி: பாவம்ன்னு இந்த பேய்க்கு உதவி செஞ்சா, அது என் கணவரையே கல்யாணம் செஞ்சுக்க ஆசை படுதே
தனது தங்கை தாமரையை வீட்டுக்கு அழைத்து வந்து, அவளுக்கு நிர்வாகம் போன்ற விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அரவிந்த் - தாமரை ஒரே ஊரில் இருந்தால் தான் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடியும் என்றெண்ணிய தேவி, தாமரையை தனது வீட்டுக்கு அழைத்து வருகிறாள்.
அரவிந்த் விளக்கு ஏற்ற கோயிலுக்கு வருகிறான். அங்கு தாமரையும் யதேச்சையாக வர, அரவிந்த் அவளைப் பார்த்து எதுவும் பேச முடியாமல் நிலை தடுமாறி நிற்கிறான். அரவிந்தின் அருகில் வந்த தாமரை, நல்லா இருக்கீங்களான்னு கேட்க, ’நீ பேசமாட்டேன்னு நினைச்சேன் தாமரை’ என்கிறான் அரவிந்த்.
அரவிந்துடன் விவாகரத்து: இன்னொரு திருமணம் செய்துக் கொள்கிறாரா தாமரை?
”ஒரு வருஷம் ஒரே வீட்டில் இருந்திருக்கோம். என்னை உங்க வீட்டில் இருந்தவரைக்கும் நல்லா பார்த்துக்கிட்டீங்க. பேசாமல் போனால் நல்லாவா இருக்கும்? அதுதான் எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன்” என்கிறாள் தாமரை. ”என் மேல எதுவும் தப்பு..” என்று அரவிந்த் சொல்வதற்குள், ”நான் உங்களைத் தப்பு சொல்லவே இல்லைங்க. என்னை பிடிக்கலை விவாகரத்து பண்ணிடறேன்னு சொன்னீங்க .அதோட விட்டுட்டேன் .பழசெல்லாம் எதுக்கு” எனக் கேட்கிறாள்.
பின்னர் அங்கிருந்து தாமரை நகர்ந்து செல்ல, ”என்னை நாலு அடி கூட அடிச்சுருக்கலாம் தாமரை. இப்படி பேசிட்டு போறியேன்னு கண் கலங்கிய அரவிந்த், என்னைப் பத்தின நினைவு உன் மனசின் ஒரு ஓரத்தில் இருந்தால் கூட, நீ என்னை திரும்பிப் பாப்ப.. ப்ளீஸ் பாரு தாமரைன்னு” கண்ணீருடன் அவளையே பார்த்து நிற்கிறான். ஆனால் தாமரையோ திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டாள்.