5 ஆண்டுகள் கழித்து ‘நானும் ரவுடி தான்’ டீம் இஸ் பேக்!

விஜய்யின் 'மாஸ்டர்' தயாரிப்பாளரான லலித் குமார் தான் அந்தப் படத்தை தயாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

By: January 29, 2020, 11:39:52 AM

Naanum Rowdy Thaan Team Reunites :  இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் கடந்த 2015-ல் வெளியானது. இதில் தான் விஜய் சேதுபதியும் நயன்தாராவும் முதன்முதலில் இணைந்து பணியாற்றினர். இந்த பிளாக் பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, ‘இமைக்கா நொடிகள்’ படத்திலும் இந்த ஜோடி ஒன்று சேர்ந்தது.

தளபதி 65: அடடா…! இந்த இயக்குநர் நம்ம லிஸ்ட்லயே இல்லையே..?

இந்நிலையில் மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் ஒரு புதிய படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். அந்தப் படத்தின் படபிடிப்பு, இந்த ஆண்டு மே மாதத்தில் துவங்கும் என்று கூறப்படுகிறது. இதே கூட்டணி நானும் ரவுடி தான் படத்தில் பணியாற்றிய போது தான், விக்னேஷும் நயனும் காதலில் விழுந்தார்கள். தற்போது அவர்களுடைய காதல் 5 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

Man Vs Wild : முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! நாளை மீண்டும் காட்டுக்குள் செல்வாரா ரஜினி?

இதற்கிடையே  விஜய்யின் ‘மாஸ்டர்’ தயாரிப்பாளரான லலித் குமார் தான் அந்தப் படத்தை தயாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அந்தப் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கிறார்.  தவிர, முன்னதாக விக்னேஷ் தனது நண்பரான சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற இருந்தார். ஆனால் அந்தப் படம் பெரிய பட்ஜெட்டாக இருப்பதால், அதை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்திருக்கிறாராம். அதற்குள் தான் விஜய் சேதுபதியையும், நயன்தாராவையும் வைத்து புதிய படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாலாம என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Naanum rowdy dhaan team reunites vijay sethupathi nayanthara

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X