நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடக்கவிருக்கிறது.
இதற்கு இந்த முறையும் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி களம் இறங்குகிறது. இதில் நாசர் (தலைவர்), விஷால் (பொதுச் செயலாளர்), கார்த்தி (பொருளாளர்), கருணாஸ் (துணைத் தலைவர்) ஆகியோர் மீண்டும் அதே பதவிகளுக்குப் போட்டியிடுகிறார்கள்.
நடிகர் சங்க தேர்தல்: ’பாண்டவர் அணி 2.0’-வின் முழு பட்டியல் இங்கே!
செயற்குழு உறுப்பினர்களுக்கு கோவை சரளா, நந்தா, பிரசன்னா, சிம்ரன், பசுபதி, ராஜேஷ், மனோபாலா, ஜெரால்டு, காளிமுத்து, ரத்னப்பா, அஜய் ரத்னம், பிரேம், பிரகாஷ், சோனியா போஸ், தளபதி தினேஷ், ஜூனியர் பாலைய்யா, ஹேமா, குஷ்பு, லதா, நிதின் சத்யா, பருத்திவீரன் சரவணன், ஆதி, வாசுதேவன், காந்தி காரைக்குடி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில் விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து, நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் களம் இறங்கியுள்ளார்.
இதில், கே.பாக்யராஜ் தலைவர் பதவிக்கும் ஐசரி கணேஷ் பொதுச்செயலாளார் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். உதயா, குட்டி பத்மினி ஆகியோர் துணைத்தலைவர் பதவிகளுக்குப் போட்டியிட உள்ளனர்.
குட்டி பத்மினி முதலில் விஷால் டீம் சார்பாக போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். பின்னர் அங்கிருந்து இந்த அணிக்கு வந்து விட்டார்.
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு, நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ், ஆர்த்தி, காயத்ரி ரகுராம், நடிகர்கள் ரமேஷ் கண்ணா, பரத், ஸ்ரீகாந்த், விமல் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.