நடிகர் சங்கத் தேர்தல்: உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது – நீதிபதி

Pandavar Ani Vs Swami Sankara Das Ani: ஜூன் 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் சென்னை அடையாறிலுள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

By: Jun 20, 2019, 3:39:44 PM

Nadigar Sangam Election Clash Updates: நடிகர் சங்கத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஞாயிற்றுக் கிழமை, அதாவது ஜூன் 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் சென்னை அடையாறிலுள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த முறை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால், நாசர், கார்த்தியின் ’பாண்டவர் அணி’யும், பாக்யராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் ஆகியோரை உள்ளடக்கிய ‘சுவாமி சங்கர தாஸ்’ அணியும் இம்முறை மோதுகிறார்கள்.

Nadigar Sangam Election 2019

இதற்கிடையே தேர்தல் நடக்கும் தினத்தன்று போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில், விஷால் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரிக்கு அருகில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வசிப்பதால், தேவையில்லாத பிரச்னைகளுக்கு வழி வகுக்கும் என்பதால், நடிகர் சங்கத் தேர்தலை ஓ.எம்.ஆர் அல்லது, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் வைத்துக் கொள்ளும்படி, சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரியும் விஷால் சாம்ராஜ்யம்? நடிகர் சங்கத்தில் என்ன தான் நடக்கிறது?

Live Blog
Nadigar Sangam Election Clash Live Updates நடிகர் சங்க தேர்தல் 2019: பாண்டவர் அணிக்கும் சுவாமி சங்கர தாஸ் அணிக்கும் இடையே நடக்கும் கருத்து மோதல்களை உடனுக்குடன் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
14:47 (IST)20 Jun 2019
Nadigar Sangam Case: நடைமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளது

நடிகர் சங்க உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யக் கூறியிருந்தது சென்னை உயர் நீதிமன்றம். அதன்படி தற்போது பொறுப்பில் இருக்கும் விஷால் அணியினர், அந்த ஆவணங்களை நீதிபதியிடம் சமர்ப்பித்தனர். அதைப் பார்த்த நீதிபதி, ”நடிகர் சங்க உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பாக மனுதாரர்களின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை” என்றார். 

12:35 (IST)20 Jun 2019
Nadigar Sangam Election: ஐசரி கணேஷ் பேட்டி

ஆளுநரை சந்தித்துவிட்டு வந்த சுவாமி சங்கர தாஸ் அணியின் ஐசரி கணேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நடிகர் சங்கத்தின் பிளவுக்கு விஷால் மட்டும் காரணமல்ல, நாசர், கார்த்தி ஆகியோரும் தான் காரணம். விஷால் அணியினர் ஆளுநரை சந்தித்ததால் நாங்களும் சந்தித்தோம். நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தப்பட்டது குறித்து ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளோம்” என்றார். 

12:27 (IST)20 Jun 2019
Nadigar Sangam: உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சங்க உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான ஆவணங்களை பிற்பகலில் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு நீக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் போலியானவர்கள் என்றால், கடந்தத் தேர்தலில் அவர்கள் எப்படி வாக்களித்தார்கள் என்ற கேள்வியையும் நடிகர் சங்கத்திடம், உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ளது. 

12:10 (IST)20 Jun 2019
Madras HC-Nadigar Sangam: நடிகர் சங்கத்திடம் உயர் நீதிமன்றம் கேள்வி

நடிகர் சங்கத்திலிருந்து 53 உறுப்பினர்களை எப்படி நீக்கினீர்கள், என நடிகர் சங்கத்திடம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, சந்தா செலுத்தாததால் 53 பேரை நீக்கி விட்டோம். தவிர 52 பேர் இறந்து விட்டனர் என நடிகர் சங்கம் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. 

11:38 (IST)20 Jun 2019
Nadigar Sangam: பாக்யராஜ் அணி ஆளுநருடன் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் சுவாமி சங்கரதாஸ் அணியினர் சந்திப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த அணியின் சார்பில் ஐசரி கணேஷ், கே.பாக்யராஜ், குட்டி பத்மினி, பிரசாந்த், சங்கீதா உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். 

11:13 (IST)20 Jun 2019
ஐசரி கணேஷ் ஆளுநர் மாளிகை வருகை

விஷால் அணியினர் நேற்று ஆளுநரை சந்தித்த நிலையில்  இன்று சுவாமி சங்கரதாஸ் அணியினரும் ஆளுநரை சந்திக்கின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை கிண்டி ஆளுநர் மாளிகைக்கு ஐசரி கணேஷ் அணி வருகை புரிந்துள்ளார். 

11:00 (IST)20 Jun 2019
Nadigar Sangam: தேர்தல் ரத்தை எதிர்த்து மேல் முறையீடு

நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து, சங்கங்களின் பதிவாளர் நேற்று உத்தரவிட்ட நிலையில், நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து விஷால் தலைமையிலான அணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. 

10:41 (IST)20 Jun 2019
Nadigar Sangam Election: ஆளுநரை சந்திக்கும் சுவாமி சங்கர தாஸ் அணி

நேற்று விஷாலின் ‘பாண்டவர் அணி’ ஆளுநரை சந்தித்து தங்களது பிரச்னைகளை விவரித்தனர். இதற்கிடையே இன்று பாக்யராஜ் தலைமையிலான ‘சுவாமி சங்கர தாஸ்’ அணி ஆளுநரை சந்திக்கிறது.

Nadigar Sangam Election 2019: பரபரப்பான சூழலில் நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென 61 பேர் பதிவாளரிடம் புகார் அளித்தனர். இதற்கு உரிய விளக்கம் அளிக்கும்படி நடிகர் சங்கத்துக்கு கடந்த 14-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார் பதிவாளர். இதைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தேர்தலில் அதிக குளறுபடிகள் இருப்பதாலும், வாக்களிக்க தகுதியுள்ள வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய வேண்டும் என்பதாலும் தேர்தலை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் பதிவாளர்.

இதற்கிடையே நேற்று விஷாலின் ‘பாண்டவர் அணி’ ஆளுநரை சந்தித்து தங்களது பிரச்னைகளை முன்வைத்தனர். இன்று பாக்யராஜ் தலைமையிலான ‘சுவாமி சங்கர தாஸ்’ அணி ஆளுநரை சந்திக்கிறது.

Web Title:Nadigar sangam elections clash live updates vishal bhagyaraj

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X