Colors Kodeeswari : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் அவ்வப்போது பிரபலங்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை மீனா கலந்துக் கொண்டு தனது திரை அனுபவங்களை பார்வையாளர்களுடன் பகிர்ந்துக் கொண்டார்.
அப்போது ’ரஜினியை நீ எப்படி கூப்பிடுவ? என ராதிகா கேட்க, ‘முதல்ல அங்கிள்ன்னு கூப்பிட்டு இருந்தேன், அப்றம் சார்ன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டேன். எஜமான் முதல் கட்ட படபிடிப்புல நான் அவர் கிட்ட பேசவே இல்ல, காரணம் அவர சார்ன்னு கூப்பிடுறதா, அங்கிள்ன்னு கூப்பிடுறதான்னு எனக்குள்ளயே ஒரு தடுமாற்றம். ஆனா அவர் ரொம்ப ஸ்வீட். அதெல்லாம் பத்தி கவலைப்பட மாட்டார். அப்புறம் அவர் என்ன அழ வைக்கிற அளவுக்கு எல்லாம் கிண்டல் பண்ணிருக்காரு’ என்றார்.
அதற்கு ராதிகாவோ, ‘அவர் என்ன பாத்தா பயந்துடுவாறு. ஏன்னா கிண்டல் பண்ணி நா அவர அழ வச்சிடுவேன். அவர் என்ன பாத்ததும் ராதிகான்னு கை எடுத்து கும்பிட்டு, என்ன விட்டுடுன்னு சொல்லுவாறு. நான், ஸ்ரீதேவி, ரஜினி மூணு பேரும் போக்கிரி ராஜா படம் நடிக்கும் போது, நைட்டு 2 மணிக்கு ஷூட்டிங் முடிஞ்சு யார் முதல்ல வீட்டுக்குப் போறதுன்னு போட்டியே இருக்கும். அந்த செட்ல ஒரு பாம்பு வேற இருக்கும் அத கைல பிடிச்சுட்டு என்னையும், ஸ்ரீதேவியையும் கதற விட்ருவாரு. அந்த ரஜினியை ரொம்பவே மிஸ் பண்றேன்’ என்றார்.
உங்களோட சின்ன சின்ன ஆசை என்ன என்று ராதிகா, மீனாவிடம் கேட்க, ‘பீச்சுக்கு போயி மண்ல விளையாடணும். நைனிகா கிட்ட நான் தான் ஸ்ட்ரிக்ட். எங்கம்மா என் கிட்ட ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்க, ஆனா நைனிக்கான்னாலே பயந்துடுவாங்க. எங்கயாச்சும் போகணும்ன்னா, அவ கூட தனியா போக மாட்டாங்க. அவ எந்த நேரத்துல என்ன பேசுவாளோ, என்ன அவ கிட்ட தனியா விடாதன்னு சொல்லுவாங்க. அவளும், என்ன அம்மம்மான்னு மிரட்டுவா. ஸ்கிரீன்ல மட்டும் இல்ல, வீட்லயும் தெறி பேபி தான்’ என்றார் மீனா.