’தமிழ் சினிமா வரலாற்றுலயே மோசமான டான்சர் நான் தான்’ – மாதவன்

“ஒருபோதும் தன்னம்பிக்கையை கைவிடாத ஒருவர். தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் தன்னை நிரூபித்தார்."

By: July 4, 2020, 1:27:00 PM

நடிகர் மாதவனின் ரசிகை ஒருவர், அவருக்கு ட்விட்டரில் அழகான பாராட்டை தெரிவித்தார். ஆனால் அது அவருக்கு சங்கடமாக இருந்தது. மாதவன் நடனமாடிய பழைய தமிழ் படமான ’நள தமயந்தி’ பட பாடலின் க்ளிப்பை அந்த ரசிகை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

மனைவி சங்கீதா சொன்ன பதில்.. அட தளபதியே ஷாக் ஆயிட்டார் போங்க!

”வணக்கம் மாதவன் சார். இந்த அழகான பாடலை மீண்டும் பார்க்கிறேன், தயவுசெய்து உங்களை திருமணம் செய்ய அனுமதி தாருங்கள்” என அந்த ரசிகைக் கேட்டிருந்தார். மாதவன் நடிப்பில் 2003-ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான ’நள தமயந்தி’யின் திருமங்கல்ய தாரணம் பாடல் அதில் இணைக்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த மாதவன், “தமிழ் சினிமா வரலாற்றில் மிக மோசமான நடனக் கலைஞர்???” எனக் கேட்டிருந்தார்.

இருப்பினும், மாதவனின் ரசிகர்கள் அவருக்கு இன்னும் அன்பு மழை பொழிந்தனர். “ஒருபோதும் தன்னம்பிக்கையை கைவிடாத ஒருவர். தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் தன்னை நிரூபித்தார். ஒவ்வொரு தோல்வியின் போதும் வலுவாக பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போல எழுந்து நின்றார்!  மேடியின் மூன் வாக் எங்களுக்கு தேவையில்லை. ஒரு புன்னகை மட்டும் போதும்” எனவும், “அனைத்து ஹீரோவுக்கும் நடன திறன்கள் தேவையில்லை .. சிலருக்கு புன்னகை போதும்” எனவும் ரசிகர்கள் கமெண்டுகளில் தெரிவித்தனர்.

’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி

கீதா மோகன்தாஸ் மற்றும் ஸ்ருத்திகா ஆகியோர் நடித்திருந்த படம் தான்  ’நள தமயந்தி’. இதனை கமல்ஹாசன் தயாரித்தார். இப்படத்தில் ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் சமையல்காரராக மாதவன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Nala damayanthi r madhavan calls himself worst dancer in the history of tamil cinema

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X